“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!

Updated: 13 February 2020 13:08 IST

ஆர்சிபி அணியின் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்த புகைப்படங்கள் எல்லாம் நீக்கப்பட்டு, பெயரும் வெறும் ‘ராயல் சேலன்ஞர்ஸ்’ என்று மாற்றப்பட்டுள்ளது.

Virat Kohli Questions RCB After IPL Franchise Removes Social Media Posts
ஆர்சிபி அவர்களின் சமூக ஊடக பதிவுகளை நீக்கிய பின்னர் விராட் கோலி அதிர்ச்சியடைந்தார். © AFP

ஆர்சிபி அணியின் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆர்சிபி கேப்டன் விராட் கோலி அதிர்ச்சியடைந்துள்ளார். தற்போது, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் கோலி, பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் நீக்கப்படுள்ளதை அறிந்து ஆர்ச்சரியப்பட்டதோடு, கேப்டனாக இருக்கும் அவருக்கு இதுகுறித்து அறிவிப்பும் இல்லாமல் இருப்பத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் கேப்டனான எனக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் தெரிவியுங்கள் @rcbtweets,” விராட் கோலி ட்விட் செய்தார்.

2008ம் ஆண்டு, ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரு போட்டியை கூட வெல்லாத ஆர்சிபி, தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் பெயரை மாற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அந்தப் பக்கத்தில் இருந்த புகைப்படங்கள் எல்லாம் நீக்கப்பட்டு, பெயரும் வெறும் ‘ராயல் சேலன்ஞர்ஸ்' என்று மாற்றியுள்ளது.

இதேபோன்று ஃபேஸ்புக் மற்றும் இஸ்டாகிராம் பக்கங்களுக்கும் செய்யப்பட்டுள்ளது.

மாற்றத்தை பார்த்த ஆர்சிபி அணியின் லெக் ஸ்பின்னரான சாஹலும் அதிர்ச்சியடைந்துள்ளார். “ஆர்சிபி, உங்களுடைய படங்கள் மற்றும் பதிவுகள் எங்கு சென்றன?” என்று ட்விட் செய்துள்ளார்.

“@rcbtweets நம்முடைய சமூக வலைதளப் பக்கங்களுக்கு என்ன ஆச்சு? இது தற்காலிக இடைவேளை என்று நம்புகிறேன்” என்று டி வில்லியர்ஸ் பதிவிட்டார்.

பெங்களூரூ வை தளமாக கொண்ட ஆர்சிபி அணி, புதிய ஸ்பான்ஸுடன் கையெழுத்திட்ட ஒருநாள் கழித்து இந்த மாற்றங்களை செய்துள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐபிஎல் 2020ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை விராட் கோலி வழிநடத்துவார்
  • ஆர்சிபி, கிரிக்கெட் செயல்பாட்டு இயக்குநராக மைக் ஹஸனை இணைத்துள்ளது
  • தொடர்ச்சியாக 12 நேர் போட்டிகளில் கோப்பையை வெல்லத் தவறியது ஆர்சிபி
தொடர்புடைய கட்டுரைகள்
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
அனுஷ்கா ஷர்மாவுடன் விராட் கோலி: இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்! 
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
“புதிய லோகோவை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” - ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
விராட் கோலி மற்றும் அணியினருடன் புட்டாருருவுக்கு சென்ற அனுஷ்கா ஷர்மா!
“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!
“கேப்டனான எனக்கே தெரியல” - ஆர்சிபியின் சமூக வலைதள மாற்றங்கள் குறித்து கோலி!
“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!
“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!
Advertisement