விராட் பதிவிட்ட "ஸ்குவாட்" புகைப்படம்... 'ரோஹித் ஷர்மா எங்கே' என்று கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

Updated: 02 August 2019 12:44 IST

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்று வெளியேறிய பிறகு இந்த வதந்திகள் பரவ தொடங்கின.

Virat Kohli Posts "Squad" Picture, Fans Ask "Wheres Rohit Sharma?"
விராட் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கு இடையில் பிரச்னை போன்ற தகவல்கள் வெளியாகி வந்தன. © Twitter @imVkohli

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்களில் முதலில் டி20 போட்டிகள் நடக்கவுள்ளன. இதற்கான இந்திய அணி அமெரிக்கா சென்றுள்ளது. சனிக்கிழமை நடக்கவுள்ள டி20 போட்டிக்கு முன்பாக விராட் கோலி ட்விட்டரில் ஒரு புகைப்படத்துடன் "ஸ்குவாட்" என்று எழுதி பதிவிட்டார். இந்தப் புகைப்படத்தில் ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, கலீல் அகமது, ஸ்ரேயாஸ் ஐயர், க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் விராட் கோலியுடன் உள்ளனர். ஆனால், துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்தப் புகைப்படத்தில் இல்லை.

விராட் கோலிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கு இடையில் பிரச்னை போன்ற தகவல்கள் வெளியாகி வந்தன. உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்று வெளியேறிய பிறகு இந்த வதந்திகள் பரவ தொடங்கின. இப்போது, ரோஹித் இல்லாத புகைப்படம் பகிரப்பட்டிருப்பது மீண்டும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

"இதை நான் நீண்ட காலமாக பார்த்து வருகிறேன். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிவது சரியானதல்ல. அது மரியாதை குறைக்கும் நிகழ்வாக அமைந்து விடுகிறது. எனக்கும் ரோஹித்துக்கும் இடையில் ஒரு பிரச்னையும் இல்லை," என்று கோலி கூறியிருந்தார்.

"நாம் பொய்களை ஊட்டி வளர்க்கிறோம். உண்மையை ஏற்க மறுக்கிறோம். நடந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நம் கண் முன் மறைந்து விடுகிறது. நாமாகவே சிலவற்றை கற்பனை செய்து, மண்டையில் ஏற்றிக்கொண்டு, அது தான் உண்மை என்று நினைத்துகொள்கிறோம்" என்றார் கோலி.

இரு வீரர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு உள்ளது என்று சொல்பவர்களுக்கு மேலும் அது குறித்து பேசும் விதமாக ரோஹித் ஷர்மா ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

"நான்  என் அணிக்காக மட்டும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறேன்," என்று ரோஹித் ஷர்மா ட்விட் செய்துள்ளார். 

மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியின் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்குகிறது. இதில் 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன.

அனைத்து விதமான போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
New Zealand vs India: முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 51 ரன்கள் முன்னிலை!
"ஆசியா லெவன் vs உலக லெவன் போட்டிகளில் கோலி விளையாட வேண்டும்" - பிசிபி வேண்டுகோள்
"ஆசியா லெவன் vs உலக லெவன் போட்டிகளில் கோலி விளையாட வேண்டும்" - பிசிபி வேண்டுகோள்
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
1st Test Day 1: மழை காரணமாக இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டது... இந்தியா 122/5
1st Test, Preview: வலிமையான அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது இந்தியா!
1st Test, Preview: வலிமையான அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது இந்தியா!
“அடுத்த 2 அல்லது 3 வருடங்களுக்கு ஓய்வு குறித்து எண்ணம் இல்லை” - விராட் கோலி
“அடுத்த 2 அல்லது 3 வருடங்களுக்கு ஓய்வு குறித்து எண்ணம் இல்லை” - விராட் கோலி
Advertisement