'எங்களின் சிறந்தவனுக்கு பிறந்தநாள்!'- இது ரஹானேவுக்கு கோலியின் வாழ்த்து!

Updated: 07 June 2018 22:44 IST

மேலும் இந்த வாழ்த்துப் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் ரஹானே ட்விட்டரில் அளித்த பதிலில், “மிக்க நன்றி நண்பரே” எனக் குறிப்பிட்டுள்ளார்

Virat Kohli Posts Special Birthday Message For Ajinkya Rahane, Hints At Batsman
India cricketer Ajinkya Rahane celebrated his 30th birthday on Wednesday. © AFP

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் அஜிங்க்யா ரஹானே நேற்று தன்னுடைய 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்திய கிரிக்கெட் அணியினர் விரைவில் இங்கிலாந்து தொடர் ஒன்றில் விளையாடத் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ரஹானே இடம்பெறவில்லை. இந்த சூழலில்தான் ரஹானேவை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு அருமையான வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார் விராட் கோலி.

இதுகுறித்து தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள விராட் கோலி கூறுகையில், “விரைவில் கடல்கடந்த இங்கிலாந்து தொடர் தொடங்க உள்ளது. ஆனால், இந்த சூழலில் எங்களில் மிகச்சிறந்த வீரனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். தொடர்ந்து உனது அதிரடி விளையாட்டு தொடரட்டும்” எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் இந்த வாழ்த்துப் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் ரஹானே ட்விட்டரில் அளித்த பதிலில், “மிக்க நன்றி நண்பரே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள், மூன்று டி 20 போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளனர். இத்தொடர் வருகிற ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த இங்கிலாந்து தொடர் தொடங்கும் முன்னர் இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வருகிற ஜூன் 14-ம் தேதி பங்கேற்க உள்ளது. இந்தத் தொடருக்கு கேப்டனாக ரஹானே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஹானே நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகத் திகழ்ந்தவர். ஐபிஎல்-ல் 15 போட்டிகளில் 370 ரன்களுடன் 28.46 என்ற புள்ளிக் கணக்கில் தனது சராசரி ஸ்கோரைப் பதிவு செய்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ரஹானே நேற்று தன்னுடைய 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்
  • இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் ரஹானே இடம் பெறவில்லை
  • ரஹானேவை ஊக்கப்படுத்தும் படி வாழ்த்திய விராட் கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
சென்னையின் ப்ளே ஆஃப் கனவை தாமதப்படுத்துமா ஆர்சிபி?
சென்னையின் ப்ளே ஆஃப் கனவை தாமதப்படுத்துமா ஆர்சிபி?
அதிரடியாக ஆடி குல்தீப்பை அழவைத்த மொயின் அலி... தேற்றிய ரசிகர்கள்!
அதிரடியாக ஆடி குல்தீப்பை அழவைத்த மொயின் அலி... தேற்றிய ரசிகர்கள்!
விராட் கோலிக்கு புதிய செல்லப் பெயர் சூட்டிய டிவில்லியர்ஸ்!
விராட் கோலிக்கு புதிய செல்லப் பெயர் சூட்டிய டிவில்லியர்ஸ்!
சுனில் நரேனை மான்கடிங் செய்ய சொல்லி ஏமாற்றிய விராட் கோலி
சுனில் நரேனை மான்கடிங் செய்ய சொல்லி ஏமாற்றிய விராட் கோலி
ஐபிஎல்லில் 5வது சதமடித்து அசத்தினார் விராட் கோலி!
ஐபிஎல்லில் 5வது சதமடித்து அசத்தினார் விராட் கோலி!
Advertisement