Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி

Updated: 19 September 2019 10:33 IST

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பெங்களூரில் செப்டம்பர் 22 ஆம் தேதி (ஞாயிறு) நடக்கவுள்ளது.

Virat Kohli Overtakes Rohit Sharma To Become Leading Run-Scorer In T20Is
Virat Kohli: தனது 22 வது அரைசதத்தை அடித்தார் கோலி © AFP

இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்தியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, 52 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இந்த ஆட்டத்தில் இரண்டு சாதனைகளை படைத்தார் 'கிங்' கோலி.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை தனக்குரியதாக்கினார் விராத் கோலி. நேற்று தனது 22 வது சர்வதேச டி20 அரைசதத்தை அடித்தது மூலம் இந்த சாதனையை படைத்தார் கோலி.

அதிக டி20 அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 22 அரைசதங்களுடன் முதலிடத்தில் கோலியும் 21 அரைசதங்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் 16 அரைசதங்களுடன் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 2,441 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 களில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார். ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் கோலி. ரோஹித், 97 போட்டிகளில் 2,434 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்களில் 149 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டி காக் அரைசதம் அடித்தார். இந்தியாவிற்கு பந்துவீச்சாளர்களில் தீபக் சாஹர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

பின்பு தனது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா அணிக்கு ஷிகார் தவான் 40 ரன்கள் குவித்தார். ரோஹித், தவான், பண்ட் அவுட் ஆக கோலி – ஷ்ரேயஸ் இணை இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இறுதியில் கோலி 72 ரன்களிலும் ஷ்ரேயஸ் 16 ரன்களிலும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியை குறித்து கோலி கூறுகையில், ‘இது போன்று விளையாடி அணியை வெற்றி பெற வைப்பது என்பது ஓர் சிறந்த தருணமாகும். நாட்டிற்காக தான் நான் விளையாடுகிறேன். ஆடுகளமும் பேட்டிங் செய்ய சிறந்ததாக உள்ளது. பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்' என்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்தியா அணி 1-0 என முன்னிலையில் உள்ளது. முதல் டி20 போட்டியானது மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது பெங்களூரில் செப்டம்பர் 22 ஆம் தேதி (ஞாயிறு) நடக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
  • ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார் கோலி
  • கோலி 72 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
'மை பார்ட்னர் இன் கிரைம்' - கோலியின் அந்த பார்ட்னர் யார்?
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
Advertisement