தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?

Updated: 16 October 2019 11:26 IST

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19 ஆம் தேதி துவங்கவுள்ளது.

Virat Kohli Two Points Away From Overtaking Steve Smith In ICC Test Rankings
ஐசிசி தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்றுள்ளார் விராத் கோலி © AFP

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 254 ரன்கள் குவித்து அசத்தினார் கோலி. அதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட ஐசிசி தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்றுள்ளார் விராத் கோலி. முதலிடத்தில் இருக்கும் ஸ்மித்திற்கும் கோலிக்கு இடையேயான வித்தியாசம் ஒரு புள்ளியாக குறைந்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறுவார் கோலி. தற்போது ஸ்மித் 937 புள்ளிகளும் கோலி 936 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையிலும் கோலி தான் முதலிடத்தில் உள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 20, 31 ரன்கள் குவித்ததால் ஜனவரி 2018 க்கு பின்பு முதல் முறையாக 900 புள்ளிகளுக்கு கீழ் சென்றார் கோலி. அதனை இரண்டாவது டெஸ்ட் போட்டி மூலம் சரி செய்தார்.

ஸ்மித், 2019 ஆஷஸ் தொடரில் 700 ரன்களுக்கு மேல் குவித்ததால் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.

அதே நேரம் இந்தியாவின் துவக்க வீரரான மயன்க் அகர்வாலும் சிறப்பாக விளையாடியதால் தரவரிசையில் 17 வது இடத்திற்கு முன்னேறினார். பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 7 வது இடத்திற்கு முன்னேறினார்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19 ஆம் தேதி துவங்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 254 ரன்கள் குவித்து அசத்தினார் கோலி
  • ஸ்மித்திற்கும் கோலிக்கு இடையேயான வித்தியாசம் ஒரு புள்ளியாக குறைந்துள்ளது
  • ஸ்மித் 937 புள்ளிகளும் கோலி 936 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
தொடர்புடைய கட்டுரைகள்
'மை பார்ட்னர் இன் கிரைம்' - கோலியின் அந்த பார்ட்னர் யார்?
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
Advertisement