Listen to the latest songs, only on JioSaavn.com
 

IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!

Updated: 14 January 2020 13:01 IST

விராட் கோலி 20 டெஸ்ட் சதங்களையும், 21 ஒருநாள் டன்களையும் கேப்டனாக குவித்துள்ளார்.

Virat Kohli One Century Away From This Huge World Record
விராட் கோலி அனைத்து வடிவங்களில் 70 சதங்களை கொண்டுள்ளார், மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த எண்ணிக்கையைச் சேர்க்க முயற்சிப்பார். © AFP

விராட் கோலி, அனைத்து வடிவங்களிலும் அதிகபடியான சதமடித்து கேப்டன் என்ற பெறுமையை பெற இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவை. ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கேப்டனாக 41 சதங்களை  வைத்திருந்தார், மற்றும் விராட் கோலி 2019 நவம்பரில் பங்களாதேஷுக்கு எதிரான ஈடன் கார்டனில் தனது சதத்துடன் அவருடன் சமன் செய்தார். செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போது கோலி உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

விராட் கோலி கேப்டனாக 20 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார், அதே நேரத்தில் இந்தியாவை வழிநடத்தும் போது ஒருநாள் போட்டிகளில் 21 சதம் வைத்திருக்கிறார்.

டெஸ்ட் சதங்களைப் பொறுத்தவரையில் கோலி தனது 136 ரன்களுடன் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் முன்னிலை வகித்தார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் ஒரு சதத்தை அடித்தால், அவர் ஒருநாள் டன் கேப்டனாக பாண்டிங்கின் சாதனையை சமன் செய்வார்.

குறிப்பிடத்தக்க வகையில், ரிக்கி பாண்டிங் 376 இன்னிங்ஸ்களில் இருந்து தனது 41 சதங்களையும், கோலி 196 இன்னிங்ஸ்களிலும் பேட் செய்துள்ளார்.

கேப்டன்ஸியின் அழுத்தம் பெரும்பாலும் ஒரு சில வீரர்கள் ஆட்டத்தில் சரிவைக் கண்டாலும், தலைமை விராட் கோலிக்கு மட்டுமே பயனளித்துள்ளது.

கோலியின் டெஸ்ட் சராசரி 54.97 ஆகவும், மிக நீண்ட வடிவத்தில் கேப்டனாக அவரது சராசரி 63.80 ஆகவும் அதிகமாக உள்ளது.

ஒருநாள் போட்டிகளில், வித்தியாசம் இன்னும் அதிகமாக உள்ளது. அவரது தொழில் சராசரி 59.84, கேப்டனாக சராசரியாக 77.60 ஆக உள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் விளையாடும், இரண்டாவது போட்டி ஜனவரி 17ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. தொடரின் இறுதிப் போட்டி ஜனவரி 19ம் தேதி பெங்களூரில் நடைபெறும்.

Comments
ஹைலைட்ஸ்
  • விராட் கோலி, ரிக்கி பாண்டிங் தலா 41 சதங்களை கேப்டனாகக் கொண்டுள்ளனர்
  • கோலி 21 ஒருநாள் டன் மற்றும் 20 டெஸ்ட் சதங்களை கேப்டனாகக் கொண்டுள்ளார்
  • கோலி கடந்த நவம்பரில் பங்களாதேஷுக்கு எதிராக பாண்டிங்குடன் சமன் செய்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!
“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
போதும்... கெளம்பு, கெளம்பு...- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
'போதும்... கெளம்பு, கெளம்பு...'- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
“நாங்கள் குரங்குகள் அல்ல” - அனுஷ்காவுடன் புகைப்படம் பதிவிட்ட விராட் கோலி!
“நாங்கள் குரங்குகள் அல்ல” - அனுஷ்காவுடன் புகைப்படம் பதிவிட்ட விராட் கோலி!
Advertisement