டெஸ்ட், ஒருநாள், ஐசிசியின் சிறந்த வீரர் என ஹாட்ரிக் விருது வென்று கோலி சாதனை!

Updated: 22 January 2019 13:52 IST

2018க்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி அணிக்கான கேப்டனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Virat Kohli Creates History, Named Test, ODI Player And Cricketer Of The Year 2018
கோலிதான் இந்த மூன்று விருதுகளையும் ஒட்டுமொத்தமாக பெறும் முதல் வீரர் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. © AFP

தினம் ஒரு சாதனையாக சாதனை செய்து வரும் விராட் கோலி புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். வரலாற்றிலேயே முதல் முறையாக ஐசிசியின் இந்த வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான கேரி சோபர்ஸ் விருதை வென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் 2018க்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி அணிக்கான கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு கோலியின் செயல்பாடு அபரிவிதமாக இருந்தது. 

கோலிதான் இந்த மூன்று விருதுகளையும் ஒட்டுமொத்தமாக பெறும் முதல் வீரர் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

"மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரே நேரத்தில் நானும் அணியும் சிறப்பான ஃபார்மில் இருப்பது மகிழ்ச்சி. இந்த விருதுகள் உத்வேகம் அளிக்கிறது" என்று கோலி தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டிகளில் 13 டெஸ்ட்களில் 1322 ரன்களும், 14 ஒருநாள் போட்டிகளில் 1202 ரன்களும் குவித்துள்ளார். இதில் 11 சதங்களும் அடங்கும்.

விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் "ஐசிசி விருதுகள் அனைத்தையும் ஒன்றாக கோலி வென்றதற்கு வாழ்த்துக்கள். விருதை வென்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கோலி 2018ம் ஆண்டுக்கான இரு அணிக்கும் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி. அவர் இந்த விளையாட்டின் சிறந்த தூதராக இருக்கிறார்" என்றார்.

கோலி சென்ற ஆண்டு கார்பீல்டு ட்ராபி மற்றும் ஐசிசி ஒருநாள் வீரர் விருதை வென்றார். 2012ம் ஆண்டும் சிறந்த ஒருநாள் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஐசிசியின் இந்த வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார்
  • கோலி தான் மூன்று விருதுகளையும் ஒட்டுமொத்தமாக பெறும் முதல் வீரர்
  • கோலி 13 டெஸ்ட்களில் 1322 ரன் மற்றும் 14 ஒருநாளில் 1202 ரன் குவித்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
Advertisement