தோனி குறித்த கேள்விக்கு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி ஏன் சிரித்தார்?

Updated: 22 October 2019 15:59 IST

பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி, விராட் கோலியுடன் பேசுவதாகவும், எம்.எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவுபடுத்துவதாகவும் கூறியதாக இந்திய கேப்டனிடம் கேட்கப்பட்டது.

Virat Kohli Laughs Off Question On Sourav Ganguly Seeking Clarity On MS Dhoni
சொந்த நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக 11வது டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது. © Twitter

ராஞ்சியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் ஒயிட்வாஷ் வெற்றியின் பின்னர் செய்தியாளர் சந்திப்பின் முடிவில் விராட் கோலி சிரித்தார். பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி, விராட் கோலியுடன் பேசுவதாகவும், எம்.எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்து தெளிவுபடுத்துவதாகவும் கூறியதாக இந்திய கேப்டனிடம் கேட்கப்பட்டது. "அவருக்கு நான் வாழ்த்து கூறினேன். அவர் பிசிசிஐ தலைவராக ஆனது மிகவும் நல்லது, ஆனால் அவர் அதைப் பற்றி இதுவரை என்னிடம் பேசவில்லை. எப்போது தேவையோ அப்போது அவர் என்னிடம் பேசுவார்," என்று கூறி விராட் கோலி சிரித்தார்.

"நான் உறுதியாக இருக்கிறேன். அதைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? அவர் என்னிடம் சொல்லும்போது அவரைச் சந்திக்கச் செல்வேன். அவ்வளவுதான்," என்று இந்திய கேப்டன் பதிலளித்தார்.

மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது. ராஞ்சி டெஸ்ட் நான்கு நாட்களில் முடிவடைந்த நிலையில், தோனியின் இடத்திற்குச் சென்று இந்தியாவின் முன்னாள் கேப்டனை சந்திப்பீர்களா என்று கோலியிடம் கேட்கப்பட்டது.

"இல்லை, அவர் இங்கே இருக்கிறார், அவர் டிரஸ்ஸிங் ரூமில் இருக்கிறார். வாருங்கள், வந்து ஹலோ சொல்லுங்கள்" என்று கோலி பத்திரிகையாளர் சந்திப்பை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பதிலளித்தார்.

தோனி தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் உள்ளார். 2019 உலகக் கோப்பைக்குப் பின்னர் கரீபியன் மற்றும் தென்னாப்பிரிக்காவில் மேற்கிந்தியத் தீவுகளுடனான இந்தியாவின் தொடரைத் தவிர்த்துவிட்டார்.

அடுத்து பங்களாதேஷ் அணியுடனான மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆடவுள்ளது. இந்தப் போட்டிகள் வரும் நவம்பர் 3ம் தேதி தொடங்கவுள்ளது.

டி20 தொடருக்கான அணி வியாழக்கிழமை தேர்வு செய்யப்படும். மேலும் பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்குலி, விஷயங்களின் திட்டத்தில் தோனியின் நிலைப்பாடு குறித்து தேர்வாளர்களுடன் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
'மை பார்ட்னர் இன் கிரைம்' - கோலியின் அந்த பார்ட்னர் யார்?
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
"பிங்க் பந்து குறித்து கனவு காண்கிறேன்" - ரஹானே பதிவுக்கு பதிலளித்த கோலி, தவான்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
கோலி மற்றும் ரஹானே கொல்கத்தாவுக்கு முதலில் வந்ததாக தகவல்!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
"ஈடன் கார்டனில் பகல்-இரவு டெஸ்ட்டுக்கு கூட்டம் நிரம்பியிருக்கும்" - சவுரவ் கங்குலி!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
இந்தியா vs பங்களாதேஷ்: MS Dhoni-யின் சாதனையை முறியடித்த Virat Kohli....!
Advertisement