ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!

Updated: 12 December 2019 19:17 IST

ஐசிசி தரவரிசையில் டி20 பேட்ஸ்மேன்களுக்கான முதல் 10 இடங்களுக்கு விராட் கோலி நுழைந்தார், அதே நேரத்தில் கே.எல்.ராகுல் ஆறாவது இடத்துக்கு முன்னேறினார்.

Virat Kohli, KL Rahul Rise In T20I Rankings After West Indies Series
விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் அரைசதம் அடித்தனர். © AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் வென்ற டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட பின்னர் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஐசிசி தரவரிசையில் முன்னேறியுள்ளனர். வியாழக்கிழமை வெளியிடப்பட்ட சமீபத்திய தரவரிசையில், ராகுல் மூன்று இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார், கோலி ஐந்து இடங்கள் தாண்டி முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். ராகுல் 56 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார் மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால், வான்கடே மைதானத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகளில் 164 ரன்கள் எடுத்தார்.

இதற்கிடையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக கோலி 183 ரன்கள் குவித்து தொடரின் வீரராக அறிவிக்கப்பட்டார்.

இருப்பினும், ரோஹித் ஒரு இடத்தில் கீழே நகர்ந்து இப்போது ஐசிசி தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ரோஹித், மூன்று டி20 போட்டிகளில் 94 ரன்கள் எடுத்தார்.

ரோஹித் மற்றும் கோலி இருவரும் டி20 போட்டிகளில் ரன் அடித்தவர்களில் முன்னணியில் உள்ளனர், தற்போது தலா 2,633 ரன்கள் எடுத்துள்ளனர்.

இந்திய கேப்டன் 75 ரன்களில் (70 இன்னிங்ஸ்) 52.66 சராசரியாக இந்த ரன்களைக் குவித்துள்ளார். மறுபுறம், ரோஹித் 32.10 சராசரியாக அதே எண்ணிக்கையிலான ரன்களை எடுக்க 104 போட்டிகள் (96 இன்னிங்ஸ்) தேவைப்பட்டது.

Comments
ஹைலைட்ஸ்
  • விராட் கோலி ஐசிசி தரவரிசையில் 10வது இடத்துக்கு முன்னேறினார்
  • கே.எல்.ராகுல் இப்போது ஆறாவது இடத்தில் உள்ள இந்திய பேட்ஸ்மேன்
  • ரோஹித் சர்மா ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
Advertisement