ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?

Updated: 20 August 2019 16:49 IST

விராட் கோலி அடித்த சதம் இன்னொரு சாதனையை எட்ட வாய்ப்பாக அமைந்துள்ளது. கேப்டனாக ரிக்கி பாண்டிங் 19 சதங்கள் குவித்துள்ளார். கோலி இன்னொரு சதமடித்தால், அவரின் சத சாதனையை சமம் செய்ய வாய்ப்புள்ளது.

Virat Kohli Closes In On Ricky Ponting
இந்தியா டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்றது, ஒருநாள் போட்டியிலும் 2-0 என்று வென்று இரண்டு தொடர்களையும் கைப்பற்றியது. © AFP

2019 உலகக் கோப்பையில் விராட் கோலி 5 அரைசதங்கள் அடித்தாலும், ஒரு போட்டியில் கூட சதத்தை எட்டவில்லை. ஆனால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இரண்டாவது தொடரில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் சதமடித்தார். இந்தியா டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்றது, ஒருநாள் போட்டியிலும் 2-0 என்று வென்று இரண்டு தொடர்களையும் கைப்பற்றியது. அடுத்து டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

விராட் கோலி அடித்த சதம் இன்னொரு சாதனையை எட்ட வாய்ப்பாக அமைந்துள்ளது. கேப்டனாக ரிக்கி பாண்டிங் 19 சதங்கள் குவித்துள்ளார். கோலி இன்னொரு சதமடித்தால், அவரின் சத சாதனையை சமம் செய்ய வாய்ப்புள்ளது. ஆண்டிகுவாவில் நடக்கவிருக்கும் போட்டியில் கோலி சதமடித்தால், இந்த சாதனை சமம் செய்யப்படும்.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தென்னாப்பிரிக்க கேப்டன் க்ரேமே ஸ்மித் ஆவார். அவர் 109 போட்டிகளில் ஆடி 25 சதங்கள் அடித்துள்ளார். மற்ற நாடுகளுக்கு சென்று 17 சதம் குவித்துள்ளார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை இந்தியா ஆகஸ்ட் 22ம் தேதி ஆண்டிகுவாவில் ஆடவுள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் ஆகஸ்ட் 30 தேதி நடக்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்த முறை
இந்த முறை 'நோட்புக்' சைகை இல்லை... என்ன செய்தார் கெஸ்ரிக் வில்லியம்ஸ்!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
India vs West Indies: சூப்பர் டைவ் கேட்ச் பிடித்த விராட் கோலி!
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 போட்டி: எங்கு, எப்போது காணலாம்?
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
விராட் கோலியை "Notebook" சைகைக்கு புகழ்ந்து தள்ளிய அமிதாப் பச்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
சிறப்பான ஆட்டத்துக்கு பிறகு விராட் கோலியை பாராட்டிய கெவின் பீட்டர்சன்!
Advertisement