Listen to the latest songs, only on JioSaavn.com
 

இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸ்... ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கோலி!

Updated: 18 February 2020 16:38 IST

கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 மில்லியன் ஃபாலொவர்ஸை கொண்ட முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

Virat Kohli Crosses 50-Million Mark On Instagram, Thanks Fans. Watch
இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். © Instagram

களத்தில் அதிகப்படியான சாதனைகள் படைத்து வந்த விராட் கோலி, இப்போது களத்துக்கு வெளியில் ஒரு சாதனை படைத்துள்ளார். கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 மில்லியன் ஃபாலொவர்ஸை கொண்ட முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். இத்தனை ஆண்டுகளாக தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். அவர் இப்போது, நியூசிலாந்தில் உள்ளார். “ஹாய் கையிஸ், இன்ஸ்டாகிராமில் நாம் இப்போது 50 மில்லியன் ஃபாலோவர்ஸை எட்டியுள்ளோம். என்னைப் பலரும் நேசிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் மற்றும் நான் என்ன செய்தாலும் பாராட்டுகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று கோலி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

"நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். கடவுள் மிகவும் கனிவானவர், பல ஆண்டுகளாக இவ்வளவு அன்பைக் காட்டியதற்கு நன்றி, நான் அதை மிகவும் பாராட்டுகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

31 வயதான கோலி, இதுவரை சமூக வலைத்தளத்தில் 930 பதிவுகளைப் பதிவேற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக, இன்ஸ்டாகிராமின் அதிகாரப்பூர்வ கணக்கில் அதிக எண்ணிக்கையிலான ஃபாலோவர்ஸ் உள்ளனர். 

உலகளவில் அதிகப்படியாக போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 200 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார்.

இந்தியர்களைப் பொருத்தவரை, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 49.9 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டு இரண்டாவது இடத்திலும், தீபிகா படுகோண் 44.1 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டு மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

கடந்த ஆண்டு கோலி, தோனியை கடந்து வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.

பிப்ரவரி 21 -ம் தேதி, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நடக்கவுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய அணி அடுத்து விளையாடப் போகும் போட்டிகளிலும் வெற்றியை நோக்கிப் பயணிக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார் கோலி
  • இந்தச் சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்
  • தன்னை ஆதரித்த, பாராட்டிய தனது ரசிகர்களுக்கு கோலி நன்றி தெரிவித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
“வாழ்க்கையில் விலைமதிப்பற்றவர்களைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருங்கள்” - அனுஷ்கா ஷர்மா!
“வாழ்க்கையில் விலைமதிப்பற்றவர்களைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருங்கள்” - அனுஷ்கா ஷர்மா!
ஐபிஎல் டீலுக்காக கோலியிடம் பணிந்து, ஆஸி., வீரர்கள் செய்த காரியம்: கொதிப்பில் முன்னாள் கேப்டன்!
ஐபிஎல் டீலுக்காக கோலியிடம் பணிந்து, ஆஸி., வீரர்கள் செய்த காரியம்: கொதிப்பில் முன்னாள் கேப்டன்!
கொரோனா வைரஸ்: விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய கோலி மற்றும் அனுஷ்கா!
கொரோனா வைரஸ்: விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்திய கோலி மற்றும் அனுஷ்கா!
“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!
“அட யாருப்பா நீ?” - கெவின் பீட்டர்சன் பதிவிட்ட வேடிக்கையான வீடியோ!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
கோலி, டெண்டுல்கர் உட்பட 40 விளையாட்டு வீரர்களுடன் வீடியோ மூலம் உரையாடிய மோடி!
Advertisement