"'A' ஃபார் அனுஷ்கா" - கோலி வெளியிட்ட புகைப்படத்தை ஆராய்ந்த ரசிகர்கள்!

Updated: 16 September 2019 15:02 IST

இந்திய கேப்டன் கோலி ஒரு நீர்நிலைக்கு அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு கேண்டிட் படத்தை வெளியிட்டார்.

Virat Kohli "Caught In The Moment" By Anushka Sharma
புகைப்படம் எடுத்தது மனைவி அனுஷ்கா என்று பதிவிட்டார் விராட் கோலி. © Twitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கவிருந்த முதல் டி20 போட்டி மழை காரணத்தால் தடைப்பட்டது. இமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் (ஹெச்பிசிஏ) ஸ்டேடியத்தில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டியை நிறுத்த வேண்டியிருந்தது. திங்கட்கிழமை, இந்திய கேப்டன் கோலி ஒரு நீர்நிலைக்கு அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு கேண்டிட் படத்தை வெளியிட்டார். கோலி அந்தப் புகைப்படத்துக்கு, "Caught in the moment" என்று எழுதி, புகைப்படம் எடுத்தது மனைவி அனுஷ்கா என்று பதிவிட்டார்.

இந்தப் புகைப்படம் எங்கு எப்போது எடுத்தது என்ற தகவல் இல்லை. ஆனால், ரசிகர்கள் அவர் டி-ஷர்ட்டில் பதியப்பட்டிருந்த 'A' என்ற எழுத்து குறித்து பேசத் தொடங்கினர். அது அனுஷ்காவை குறிக்கும் என்றும் பதிவிட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை தர்மசாலாவில் தொடர்ச்சியான மழை பெய்ததால் இந்தியாவின் உள்நாட்டுப் போட்டி மழையுடன் ஏமாற்றமளித்தது.

தர்மசாலாவில் பெய்த கனமழையால், தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களின் அதிரடியான ஆட்டத்தை காண வந்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

பிற்பகலில் லேசான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், வானிலை முன்னறிவிப்பு அனைத்தும் மாலையில் தெளிவாக இருந்தது, ஆனால் வானம் பல முறை மேக மூட்டத்துடன் இருந்தாலும், ஒரு பக்கத்திற்கு ஒரு ஐந்து ஓவர் ஆடலாம் என்ற நம்பிக்கையை அளித்தது. 

ஹெச்பிசிஏ மைதான ஊழியர்கள் கடுமையாக பணியாற்றியபோதும், வெளிப்புறங்களில் உருவாக்கப்பட்ட பல குழிகள், இதுபோன்ற சூழ்நிலைகளில் மிகக் குறுகிய ஆட்டத்தை கூட நடத்த முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது. அப்போது மீண்டும் இரண்டாவது மழை பெய்ய தொடங்கியது

மற்ற இரண்டு போட்டிகள் மொகாலி(செப்டம்பர் 18) மற்றும் பெங்களூருவில் (செப்டம்பர் 22) நடக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • விராட் கோலி ஒரு கேண்டிட் படத்தை வெளியிட்டார்
  • புகைப்படம் எடுத்தது மனைவி அனுஷ்கா என்று பதிவிட்டார் கோலி
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி மழையால் தடைப்பட்டது
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
உடற்பயிற்சிக்கு பிறகு "நல்ல உணவு" உண்டு மகிழ்ந்த இந்திய அணி வீரர்கள்!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
இந்தியா vs ஆஸ்திரேலியா: 29வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா!
Advertisement