ஹர்திக் பாண்ட்யா சர்ச்சை செயலுக்கு கேப்டன் கோலியின் ரியாக்‌ஷன்!

Updated: 11 January 2019 17:39 IST

"இருவருக்கும் 2 போட்டிகளில் ஆட தடை விதிக்க வேண்டும்" என்ற பரிந்துரையை கிரிக்கெட் கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்தார்.

Virat Kohli Reacts On Row Over Hardik Pandya, KL Rahul
Virat Kohli: இன்று வரும் முடிவை பொறுத்து ஆடும் அணியை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் கோலி உள்ளார். © AFP

ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல் ராகுல் இருவரும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்த தவறான கருத்துகளை பதிவு செய்தது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு முதல்முறையாக இந்திய கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார். "இந்திய அணி வீரர்களாக எப்போதும் நாங்கள் ஏற்க மாட்டோம். அது அவர்களது தனிப்பட்ட பிரச்னை. இதில் என்ன முடிவெடுக்கப்படும் என்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார். 

மேலும், "இந்திய அணியின் பார்வையில் இந்த நிகழ்வுகள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. இன்று வரும் முடிவை பொறுத்து ஆடும் அணியை முடிவு செய்வோம்" என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை துவங்கவுள்ளது. இந்த அணியில் ஹர்திக் மற்றும் ராகுல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிவி நிகழ்ச்சியில் பெண்கள் பற்றிய தவறான கருத்துகளை முன்வைத்த பாண்ட்யா, சர்ச்சைக்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்புக் கேட்டார்.

24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்குமாறு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பாண்ட்யா அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததால், "இருவருக்கும் 2 போட்டிகளில் ஆட தடைவிதிக்க வேண்டும்" என்ற பரிந்துரையை கிரிக்கெட் கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்தார். இன்று நடக்கும் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா உணர்ச்சிவசத்தோடு அணுகுவதில்லை" -கேப்டன் கோலி
"பாகிஸ்தானுடனான போட்டியை இந்தியா உணர்ச்சிவசத்தோடு அணுகுவதில்லை" -கேப்டன் கோலி
நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!
நாட் அவுட்டை தானாக முன்வந்து அவுட் என ஒப்புக்கொண்ட விராட் கோலி!
உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!!
உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!!
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி
தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி
Advertisement