பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய கோலி!

Updated: 23 February 2019 18:28 IST

ஜுன் 16 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி நடக்கிறது

Virat Kohli Breaks His Silence On World Cup 2019 Clash Against Pakistan
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் நாளை துவங்குகிறது © AFP

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பங்கேற்க வேண்டுமா என்பதை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சவுரவ் கங்குலி, சச்சின், ஹர்பஜன் சிங் முதலியவர்கள் தங்களது கருத்தை தெரிவித்திருந்தனர். ஆனால், இந்தியா கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கருத்து ஏதும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்து வந்தார்.

தற்போது, தன் கருத்தை கோலி தெரிவித்துள்ளார். ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு என் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது குறித்து இந்தியா அரசும் பிசிசிஐ எடுக்கும் முடிவிற்கு நாங்கள் கட்டுப்படுவோம்' என கோலி தன் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்தார்.

 

 

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடர் நாளை விசாகபட்டிணத்தில் நடக்கிறது. அதன் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் விராட் கோலி இதனை தெரிவித்தார்.

இங்கிலாந்தில் 2019 ஆண்கள் உலகக் கோப்பைத் தொடர் மே மாதம் துவங்குகிறது. இந்தத் தொடரில் ஜுன் 16 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.

 

Comments
ஹைலைட்ஸ்
  • நாளை ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் துவங்குகிறது
  • புல்வாமா தாக்குதல் பின் இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ளது
  • பல வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
India vs Australia 1st ODI: 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
IND vs AUS: விராட் கோலியின் உலக சாதனைக்கு இன்னும் ஒரு சதம் தேவை!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
"கோலி மற்றும் ஸ்மித் இடையே எந்த ஒப்பீடும் இல்லை" - கம்பீரின் உறுதியான பதில்!
Advertisement