கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!

Updated: 19 August 2019 11:26 IST

கோலியை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் சச்சின் உள்ளார்

Virat Kohli Becomes Most Followed Cricketer On Social Media
விராத் கோலி தலைமையில் இந்தியா அணி வெஸ்ட் இண்டிஸ் எதிராக விளையாடி வருகிறது © AFP

கிரிக்கெட் களத்தில் தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும்  குறைந்தது ஒரு சாதனையாவது செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் விராத் கோலி. தற்போது களத்தின் வெளியிலும் ஓர் சாதனையை படைத்துள்ளார் கோலி.

சமூக வலைதளங்களில் அதிக மக்கள் பின் தொடரும் கிரிக்கெட்டர் என்ற பெருமையை விராத் கோலி பெற்றுள்ளார். ட்விட்டர், பேஸ்புக், இண்ஸ்டாகிராம் என ஒவ்வொரு சமூக வலைதளத்திலும் 30 மில்லியன் பேர் விராத் கோலியை பின் தொடர்கிறார்கள்.

கோலியை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் சச்சின் உள்ளார். ட்விட்டரில் 30.1 மில்லியன், பேஸ்புக்கில் 28 மில்லியன், இண்ஸ்டாகிராமில் 16.5 மில்லியன் பேர் சச்சினை பின் தொடர்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்டாத தோனி, மூன்றாம் இடத்தில் உள்ளார். பேஸ்புக்கில் 20.5 மில்லியன், இண்ஸ்டாகிராமில் 15.4 மில்லியன், ட்விட்டரில் 7.7 மில்லியன் பேர் தோனியை பின் தொடர்கிறார்கள்.

ட்விட்டர், பேஸ்புக், இண்ஸ்டாகிராமில் என ஒவ்வொரு சமூக வலைதளத்திலும் 10 மில்லியன் பேர் ரோஹித் சர்மாவை பின் தொடர்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்து சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகிய மூத்த வீரர்கள் உள்ளனர்.

கிரிக்கெட்டர்களில் 8வது இடத்தில் தென் ஆப்ரிக்காவின் டி வில்லியர்ஸ் உள்ளார். இண்ஸ்டாகிராமில் 8.5 மில்லியன், ட்விட்டரில் 6.7 மில்லியன், பேஸ்புக்கில் 3.6 மில்லியன் பேர் டி வில்லியர்ஸை பின் தொடர்கிறார்கள்.

9வது இடத்தில் ஷிகர் தவானும் 10வது இடத்தில் வெஸ்ட் இண்டிஸ் வீரர் கிறிஸ் கெயிலும் உள்ளனர்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான டி20 தொடரையும் ஒருநாள் தொடரையும் விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அடுத்து டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • கோலி, சச்சின், தோனி முதல் மூன்று இடத்தில் உள்ளனர்
  • கிறிஸ் கெயில் 10வது இடத்தில் உள்ளார்
  • மூத்த வீரர்கள் ரெய்னா, யுவராஜ் இந்த பட்டியலில் உள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"மீண்டும் அணியுடன் இணைந்தது மகிழ்ச்சி" - டெஸ்ட் பயிற்சியில் விராட் கோலி
"லவ் யூ பிரதர்" - தீபக் சஹாரின் சகோதரி இதயப்பூர்வமான செய்தியுடன் எழுதிய கடிதம்!
"லவ் யூ பிரதர்" - தீபக் சஹாரின் சகோதரி இதயப்பூர்வமான செய்தியுடன் எழுதிய கடிதம்!
நடுவரின் நோபால் முடிவை மாற்ற வற்புறுத்திய கீரோன் பொல்லார்ட்!
நடுவரின் நோபால் முடிவை மாற்ற வற்புறுத்திய கீரோன் பொல்லார்ட்!
"யார் திறமையானவர்கள் என்று இந்தியா நிரூபித்தது" - சோயிப் அக்தர்
"யார் திறமையானவர்கள் என்று இந்தியா நிரூபித்தது" - சோயிப் அக்தர்
Advertisement