விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவின் அன்பின் வெளிப்பாடு... வைரலாகும் வீடியோ!

Updated: 13 September 2019 14:00 IST

டெல்லியில் நடந்த விழாவின் போது, ​​அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒன்றாக அமர்ந்த தருணம் கேமராவில் பதிவானது.

Virat Kohli, Anushka Sharma
விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். © AFP

டெல்லி  மற்றும் மாவட்ட கிரிக்கெட் வாரியம் ஃபெரோஷா கோட்லா மைதானத்தின் பெயரை அருண் ஜெட்லி என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி மறைந்த அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளது. ஜெட்லி 1999 முதல் 2013 வரை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர். அதே சமயம் ஒரு ஸ்டாண்டின் பெயர் தற்போதைய இந்திய கேப்டன் கோலியின் பெயரால் அழைக்கப்படவுள்ளது. இந்திய அணியின் வீரர்கள் மற்றும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் முன்னாள் விளையாட்டு மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி மற்றும் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டெல்லியில் நடந்த விழாவின் போது, ​​அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒன்றாக அமர்ந்த தருணம் கேமராவில் பதிவானது. இது ட்விட்டரில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய கோலி டி.டி.சி.ஏ, அவரது குழு உறுப்பினர்கள் மற்றும் அவரது குழந்தை பருவ பயிற்சியாளருக்கு நன்றி தெரிவித்தார். குடும்பத்தாருக்கு நன்றி தெரிவித்த கோலி, 2001ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை தன்னுடைய சகோதரருடன் காண சென்ற நிகழ்வை பகிர்ந்தார்.

"இவ்வளவு பெரிய அளவில் எனக்கு மரியாதை கிடைக்கும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. எனது குடும்பம், மனைவி, சகோதரர், மைத்துனர் இங்கு இருப்பதால் இதை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்று தெரியவில்லை," என்று கோலி கூறினார்.

"2001ம் ஆண்டில் (2000) ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின் போது, ​​எனது குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா எனக்கு இரண்டு டிக்கெட்டுகளை கொடுத்தார். கேலரிக்கு சென்று ஜவாகல் ஶ்ரீநாத்திடம் ஆட்டோகிராஃப் வாங்கியது இன்றும் நினைவிருக்கிறது. என் சகோதரரிடம் நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை குறித்து பேசி கொண்டிருந்தேன்."

"இன்று அதே மைதானத்தில் எனது பெயரில் ஒரு பெவிலியன் இருப்பது மிக பெரிய மரியாதை," என்றார் கோலி.

அருண் ஜெட்லியுடனான உறவு குறித்து பேசிய கோலி: "அருண் ஜெட்லி ஜியின் குடும்பத்தினரிடம் நான் சொன்னேன். உலகம் அவரை வித்தியாசமாக அறிந்திருந்தது, ஆனால் நான் அவரை சிறந்த மனிதராகவே அறிந்திருக்கிறேன்." என்றார்.

"என் தந்தை இறந்த பிறகு அவர் என் வீட்டுக்கு வந்து, எனக்கு தைரியத்தையும், பலத்தையும் கொடுத்தார். இது இன்று ஒரு முக்கியமான சந்தர்ப்பம்," என்றார் கோலி.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
Advertisement