Listen to the latest songs, only on JioSaavn.com
 

“அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர்” - விராட் கோலியை புகழ்ந்த டிம் சவுதி!

Updated: 11 February 2020 11:41 IST

இரண்டாவது போட்டியின் போது விராட் கோலியை வெளியேற்றிய வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி, அதிக முறை விராட் கோலியை அவுட் ஆக்கிய வெற்றிகரமான வீரர் ஆனார்.

Virat Kohli A Class Player, "Doesnt Have Many Weaknesses": Tim Southee
விராட் கோலியை 15 ரன்களுக்கு அவுட்டாக்கி டிரெஸிங் ரூமுக்கு திருப்பி அனுப்பினார் சவுதி. © AFP

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இரண்டாவது போட்டியின் போது விராட் கோலியை வெளியேற்றிய வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி, அதிக முறை விராட் கோலியை அவுட் ஆக்கிய வெற்றிகரமான வீரர் ஆனார். அனைத்து வடிவங்களிலும் விராட் கோலியை ஒன்பது முறையும், ஒருநாளில் ஆறு முறையும் அவுட்டாக்கியுள்ளார். அவர் சாதனையை பற்றி பேசும்போது டிம் சவுதி, ரன் மெஷினான விராட் கோலியை குறிப்பிட்டு பேசினார். “அவர் ஒரு ஏ கிளாஸ் வீரர் மற்றும் அவரிடன் பலவீனங்கள் எதுவும் இல்லை. விக்கெட் எடுப்பதற்கு புதிய பந்து உதவியாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். நாம் அதை சரியான இடத்தில் பயன்படுத்தினால் போதுமானது. முக்கியமாக கல நிலவரமும் ஒரு காரணமாக அமைகிறது,” என்று டி சவுதி கூறினார்.

இந்திய கேப்டன் இலக்கை துரத்த விரும்பியதால், அவரின் விக்கெட்டை வீழ்த்துவது மிக முக்கியமானதாக இருந்தது என்றார்.

“உங்களுடைய வேலை விக்கெட்டுகள் வீழ்த்துவது. விராட் கோலி ஒரு சிறந்த வீரர் மற்றும் நல்ல ஃபாமில் இருக்கும் வீரர். குறிப்பாக ரன் சேஸிங்கில் அவர் வலிமை மிகுந்தவராக உள்ளார். அவரை அவுட் ஆக்குவது உற்சாகத்தை அளிக்கிறது,” என்றார்.

சனிக்கிழமை 274 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி, விராட் கோலியை 15 ரன்களுக்கு அவுட்டாக்கி டிரெஸிங் ரூமுக்கு திருப்பி அனுப்பினார் சவுதி.

இங்கிலாந்து அணியிம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் க்ரெம் ஸ்வான் இருவரும் விராட் கோலியை அனைத்து வடிவங்களிலும் எட்டு முறை அவுட்டாக்கி இரண்டாவது இடத்தில் உள்ளனர். மோர்ன் மோர்கல், நாதன் லயன், ஜம்பா மற்றும் ராம்பால் ஆகியோர் ஏழு முறை இந்திய கேப்டனை அவுட்டாக்கி மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

நடந்து வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் கோலி இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே குவித்துள்ளார். 

முதல் ஒருநாள் போட்டியில் 51 ரன்களும், அதற்கு முன்பாக முதல் டி20 போட்டியில் 45 ரன்களும் குவித்துள்ளார். இதற்கிடையில் அவர் 11, 38 மற்றும் 11 ஆகிய ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • டிம் சவுதி விராட் கோலியை 9 முறை அவுட்டாக்கியுள்ளார்
  • கோலி ஒரு ஏ கிளாஸ் வீரர், பலவீனங்கள் இல்லாதவர் என்று சவுதி கூறினார்
  • ரன் சேஸில் கோலி விதிவிலக்கானவர் என்றும் அவர் கூறினார்
தொடர்புடைய கட்டுரைகள்
குவாரன்டைனில் கோலிக்கு புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய அனுஷ்கா ஷர்மா! #வீடியோ
குவாரன்டைனில் கோலிக்கு புதிய ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய அனுஷ்கா ஷர்மா! #வீடியோ
21 நாள் ஊரடங்கு: கேப்டன் விராட் கோலி வெளியிட்ட உருக்கமான வீடியோ!
21 நாள் ஊரடங்கு: கேப்டன் விராட் கோலி வெளியிட்ட உருக்கமான வீடியோ!
தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் முதல் நாக்... ட்விட் செய்த பிசிசிஐ! #OnThisDay
தொடக்க வீரராக சச்சின் டெண்டுல்கரின் முதல் நாக்... ட்விட் செய்த பிசிசிஐ! #OnThisDay
ஹர்திக் பாண்ட்யாவுடன் நடாசா பதிவிட்ட காதல் நிறைந்த புகைப்படம்!
ஹர்திக் பாண்ட்யாவுடன் நடாசா பதிவிட்ட காதல் நிறைந்த புகைப்படம்!
“கோலி அல்லது தோனி?” - பலரின் இதயங்களை வென்ற ஷாஹித் கபூரின் பதில்!
“கோலி அல்லது தோனி?” - பலரின் இதயங்களை வென்ற ஷாஹித் கபூரின் பதில்!
Advertisement