விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!

Updated: 17 October 2019 09:59 IST

ஜூன் 27 அன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். கால் காயம் காரணமாக விஜய் சங்கர் உலகக் கோப்பையிலிருந்து விலக்கப்பட்டார்.

Vijay Shankar Trolled For Posting Shirtless Picture On Social Media
ஆல்ரவுண்டர் கடைசியாக இந்தியாவுக்காக ஜூன் 27 அன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். © Twitter

விஜய் சங்கர் ஒரு உடல் உருமாற்றப் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். ஆனால் அது சிலr இந்திய ஆல்ரவுண்டரை ட்ரோல் செய்ய முடிவு செய்தனர். "வியர்வை, நேரம், பக்தி. இதற்கு செலவிடப்பட்டது! #TransformationTuesday," என்று விஜய் சங்கர் ட்விட்டரில் ஃபோட்டோவுடன் பதிவிட்டார். 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் கடைசியாக இந்தியாவுக்காக ஜூன் 27 அன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாடினார். கால் காயம் காரணமாக விஜய் சங்கர் உலகக் கோப்பையிலிருந்து விலக்கப்பட்டார். அதன்பிறகு இந்திய அணிக்கு மீண்டும் வர முடியவில்லை.

இன்ஸ்டாகிராமில் ஷங்கர் பதிவிட்ட புகைப்படம், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா மற்றும்மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை கவர்ந்தது.

இருப்பினும், சில ட்விட்டர் பயனர்களிடையே ஷங்கர் சட்டை இல்லாமல் இருக்கும் புகைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. அவர் தனது உடலைப் போல கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவில்லை என்பதற்காக அவரை ட்ரோல் செய்தார்.

m7uhq838

Photo Credit: Instagram

வலைப்பயிற்சியின் போது, பும்ரா வீசிய யார்க்கர் பந்து காலில் பட்டு விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் உலகக் கோப்பையில் பாதியில் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியாவின் 15 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியை அறிவிக்கும் நேரத்தில், இந்தியாவின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தனது "முப்பரிமாண திறன்களை" மேற்கோள் காட்டி அணியில் ஷங்கரின் இடத்தை நியாயப்படுத்தியிருந்தார்.

உலகக் கோப்பைக்கு விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, "உலகக் கோப்பையைப் பார்க்க 3டி கண்ணாடிகளின் புதிய தொகுப்பை ஆர்டர் செய்தேன்" என்று அம்பதி ராயுடு அப்போது ட்வீட் செய்திருந்தார்.

ஷங்கர் சமீபத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) மீண்டும் நுழைந்தார், தென்னாப்பிரிக்கா ஏ-க்கு எதிரான தொடருக்கான இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டார். கட்டை விரல் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
இந்திய ஏ அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக ஷிகர் தவான்!
இந்திய ஏ அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக ஷிகர் தவான்!
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
“எங்க நாட்டுக்கு வந்திடுங்க ப்ளீஸ்…”- அம்பத்தி ராயுடுவைச் சீண்டிய ஐஸ்லாந்து கிரிக்கெட்
விஜய் சங்கருக்கு பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர் இவர்தான்..!
விஜய் சங்கருக்கு பதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வீரர் இவர்தான்..!
காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகல்!!
காயம் காரணமாக தமிழக வீரர் விஜய் சங்கர் உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகல்!!
Advertisement