“நாளை என்ற நாள் இல்லை என்று நினைத்து காதலியுங்கள்” - ரோஹித் ஷர்மா!

Updated: 14 February 2020 18:05 IST

ரோஹித் ஷர்மா தனது ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

Valentines Day: Rohit Sharma Wishes Wife Ritika Sajdeh With Adroable Instagram Post
ரோஹித் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். © Instagram

ரோஹித் ஷர்மா காயம் காரணமாக நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், காதலர் தினமான இன்று, மனைவி ரித்திகாவுடன் படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். நாளை என்ற நாள் இல்லை என்று நினைத்து நீங்கள் நேசிப்பவர்களை அதிகம் நேசியுங்கள் @ritssajdeh,” என்று ரோஹித் ஷர்மா பதிவிட்டுள்ளார். ரோஹித் ஷர்மா படத்தை பகிர்ந்த சில நேரத்தில் ரசிகர்கள் தங்களின் அன்பான செய்திகளும் பதிலளித்தனர்.

ரித்திகாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் கதைகளில் ரோஹித் ஷர்மா மற்றும் மகள் சமைராவுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியில் அவர் 60 ரன்கள் குவித்தார்.

அதன்பின் பிசிசிஐ, ரோஹித் ஷர்மாவை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கியது.

ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக மயங்க அகர்வால் இணைக்கப்பட்டார், அவருடன் தொடக்க வீரராக சுப்மன் கில் சேர்க்கப்பட்டார்.

ரோஹித் ஷர்மாவை தவிர, வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த ஷர்மா டெஸ்ட் அணியில் இணைவது சந்தேகமாக உள்ளது.

விதர்பா போட்டியின் போது இஷாந்த் ஷர்மாவுக்கு காயம் ஏறபட்டது. ஃபிட்னஸ் சோதனைக்கு பிறகு தான் அவர் அணியில் இணைவார இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்று பிசிசிஐ தெரிவித்தது.

முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனிலும், இரண்டாவது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ஷிலும் நடக்கவுள்ளது.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் உலகக் சாம்பியன்ஷிப்பில் சேர்க்கப்படும். ஏற்கனவே இந்தியா விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வென்று 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

o722hoao

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
“நாளை என்ற நாள் இல்லை என்று நினைத்து காதலியுங்கள்” - ரோஹித் ஷர்மா!
“நாளை என்ற நாள் இல்லை என்று நினைத்து காதலியுங்கள்” - ரோஹித் ஷர்மா!
1st ODI: கேன் வில்லியம்சன், ரோஹித் ஷர்மா இல்லாமல் மோதும் இரு அணிகள்! #preview
1st ODI: கேன் வில்லியம்சன், ரோஹித் ஷர்மா இல்லாமல் மோதும் இரு அணிகள்! #preview
இந்தியா vs நியூசிலாந்து: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் யார்யாருக்கு இடம்!
இந்தியா vs நியூசிலாந்து: டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் யார்யாருக்கு இடம்!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
“மிக சிறந்த இந்திய கேப்டன் தோனி” - புகழ்ந்த ரோஹித் ஷர்மா!
ஹிட்-மேன் ரோஹித்துக்கு காயம்... நியூசிலாந்து தொடரிலிருந்து விலகலா?
'ஹிட்-மேன்' ரோஹித்துக்கு காயம்... நியூசிலாந்து தொடரிலிருந்து விலகலா?
Advertisement