Listen to the latest songs, only on JioSaavn.com
 

சென்னை டி20 போட்டி பும்ராஹ், உமேஷ், குல்தீப்புக்கு ஓய்வு!

Updated: 10 November 2018 11:55 IST

இந்திய அணி நிர்வாகம் இந்த ஓய்வு உமேஷ், பும்ராஹ் , குல்தீப்புக்கு கட்டாயம் தேவை என்று கூறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. 

India vs West Indies: Jasprit Bumrah, Umesh Yadav, Kuldeep Yadav Rested For Final T20I In Chennai
இதற்கு முந்தைய ஆட்டத்தில் பும்ராஹ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் இந்த தொடரில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்துயுள்ளது குறிப்பிடத்தக்கது. © Twitter

இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் போட்டிகள் நவம்பர் 21ம் தேதி துவங்க இருப்பதால் பிசிசிஐ பந்துவீச்சாளர்கள் சிறந்த உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று பும்ராஹ், உமேஷ் மற்றும் குல்தீப் ஆகிய இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் போட்டிகள்ளுக்கு சென்னையில் நடக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து ஓய்வளித்துள்ளது. 

பஞ்சாப்பை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கவுல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்திய அணி நிர்வாகம் இந்த ஓய்வு உமேஷ், பும்ராஹ் , குல்தீப்புக்கு கட்டாயம் தேவை என்று கூறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதற்கு முந்தைய ஆட்டத்தில் பும்ராஹ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் இந்த தொடரில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்துயுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பதிலாக அணிக்கு அழைக்கப்பட்டுள்ள சித்தார்த் கவுல் அயர்லாந்துக்கு எதிராக இந்த ஆண்டு அறிமுகமானார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா வொயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. 

3வது டி20க்கான இந்திய அணி

ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தினேஷ் காஅர்த்திக், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், க்ருணால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, ஷபாஸ் நதீம், சித்தார்த் கவுல்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
தன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
“அலைப்பேசிகள் இல்லாத காலம்” - த்ரோபேக் புகைப்படத்தைப் பகிர்ந்த யுவராஜ் சிங்!
“அலைப்பேசிகள் இல்லாத காலம்” - த்ரோபேக் புகைப்படத்தைப் பகிர்ந்த யுவராஜ் சிங்!
கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு வெளிப்புற பயிற்சியைத் தொடங்கினார் ஷர்துல்!
கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு பிறகு வெளிப்புற பயிற்சியைத் தொடங்கினார் ஷர்துல்!
விராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்!
விராட் கோலியின் ‘டைனோசர் நடை’ இப்போது சமூக வலைதளத்தில் பிரபலமான மீம்ஸ்!
“வாழ்நாள் நினைவுகள்” - உள்ளூர் கிரிக்கெட் நாட்களை நினைவு கூர்ந்த ஹர்திக்!
“வாழ்நாள் நினைவுகள்” - உள்ளூர் கிரிக்கெட் நாட்களை நினைவு கூர்ந்த ஹர்திக்!
Advertisement