Listen to the latest songs, only on JioSaavn.com
 

‘கோப்பையை வெல்வீர்கள்!’ – இந்திய கிரிக்கெட் ஜூனியர் அணிக்கு நம்பிக்கையூட்டிய சச்சின்!!

Updated: 09 February 2020 12:06 IST

கிரிக்கெட் ஜூனியர் அணி உலக்கோப்பையின் இறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வங்க தேசத்தை எதிர்கொள்கிறது.

U-19 World Cup Final, IND vs BAN: Sachin Tendulkars Message For Indian Team Ahead Of Bangladesh Clash
தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. © Twitter

ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களை வாழ்த்தியுள்ள சச்சின் டெண்டுல்கர், ‘நிச்சயம் நீங்கள் கோப்பையுடன் வருவீர்கள்' என்று கூறி நம்பிக்கையூட்டியுள்ளார்.

கிரிக்கெட் ஜூனியர் அணி உலக்கோப்பையின் இறுதிப்போட்டி தென்னாப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி வங்க தேசத்தை எதிர்கொள்கிறது.

இதுவரை 4 முறை இந்திய அணி ஜூனியர் கோப்பையை வென்றுள்ளது. தற்போது 5-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் களம் இறங்க உள்ளனர்.

இந்த நிலையில், ஜூனியர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூப்பர் சீனியரான சச்சின் டெண்டுல்கர். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இறுதிப் போட்டியில் களம் இறங்கும் ஜூனியர் அணிக்கு வாழ்த்துக்கள். தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நீங்கள் இறுதிப்போட்டியிலும் ஜொலித்து கோப்பையை வெல்வீர்கள் என நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

கடந்த 2018-ல் நடந்த உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி வாகை சூடியது. இன்று நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் வங்க தேசம் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

முதன்முறையாக அந்த அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்காவை காலிறுதியிலும், நியூசிலாந்தை அரையிறுதியிலும் வங்க தேசம் வீழ்த்தியுள்ளது.

இந்திய அணியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு திவ்யன்ஷ் சக்சேனா மற்றும் பிரியம் கார்க் உள்ளிட்ட வீரர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கின்றனர்.

இடதுகை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் இந்த தொடரில் 312 ரன்களை குவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அந்தப் போட்டியில் சதம் அடித்தார். இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

இதேபோன்று பந்து வீச்சும் இந்தியாவிடம் வலுவாக உள்ளது. சூஷந்த் மிஷ்ரா, கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இடது கை ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் இந்த தொடர் முழுவதும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.

இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய 297 ரன்கள் எடுத்தது. 298 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கையால் 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியாவுக்கு எதிராக இந்த தொடரில், ஒரு அணி 200 ரன்களை தாண்டியது என்றால் அது இலங்கை மட்டுமே. இதன் மூலம் இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு எப்படியுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
”சண்டையிட யாருக்கும் உரிமை இல்லை” - யு19 இறுதிப் போட்டி சம்பவம் குறித்து கபில் தேவ்!
”சண்டையிட யாருக்கும் உரிமை இல்லை” - யு19 இறுதிப் போட்டி சம்பவம் குறித்து கபில் தேவ்!
யு19 உலகக் கோப்பை: கைகலப்பில் ஈடுபட்ட இந்தியா, பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம்!
யு19 உலகக் கோப்பை: கைகலப்பில் ஈடுபட்ட இந்தியா, பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம்!
Watch: இந்திய - வங்கதேச வீரர்கள் மோதல்... U-19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பரபரப்பு!
Watch: இந்திய - வங்கதேச வீரர்கள் மோதல்... U-19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பரபரப்பு!
இறுதிப் போட்டியில் தோற்றும் போட்டி நாயகனான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இறுதிப் போட்டியில் தோற்றும் போட்டி நாயகனான யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
“ஒருவேளை தலைக்கு தான் குறி வெச்சாரோ” - யு19 இறுதிப்போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! #Video
“ஒருவேளை தலைக்கு தான் குறி வெச்சாரோ” - யு19 இறுதிப்போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! #Video
Advertisement