"இந்த இரண்டிலும் நியூசிலாந்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது" - போல்ட்

Updated: 25 January 2019 18:39 IST

நேபியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்தது.

Trent Boult Pinpoints Two "Obvious" Areas That Needs Improving For New Zealand
நியூசிலாந்தை பொறுத்தமட்டில் பிரதான ஸ்பின்னர் இல்லாதது குறையாக பார்க்கப்பட்டது. © AFP

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மொத்தமாக ஆட்டத்தை இந்தியாவிடம் இழந்தது என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஐசிசி தரவரிசையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள அணிகள் இரண்டாவது போட்டியில் நாளை மோதவுள்ளன.

டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து 157 ரன்களுக்கு சஹால், குல்தீப் சுழலில் சுருண்டது. அதன் பின் ஆடிய இந்திய அணி சிறப்பாக ஆடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூரிய ஒளி காரணமாக தடைபட்ட ஆட்டத்தில் 2 ரன்கள் இலக்கில் குறைக்கப்பட்டது. தவான் , கோலியின் அதிரடி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

34.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. தவான் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோலி 45 ரன்னில் ஆட்டமிழந்தார். ராயுடு ஆட்டமிழக்காமல் 13 ரன்கள் எடுத்திருந்தார்.

நாளை இரு அணிகளுக்கும் இரண்டாவது ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. அதற்கு முன் பேசிய போல்ட், இரண்டு விஷயங்களை பிரதானமாக தெரிவித்தார். "நாங்கள் முழுமையாக ஆட்டத்தை இந்தியாவிடம் இழந்தோம். டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தால் நல்ல ஸ்கோரை எட்ட வேண்டும் அதனை தவறவிட்டோம்" என்றார். முதல் பத்து ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்ததும் காரணம் என்றும் கூறினார். 

நியூசிலாந்தை பொறுத்தமட்டில் பிரதான ஸ்பின்னர் இல்லாதது குறையாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய ஸ்பின்னர்கள் குல்தீப் மற்றும் சஹால் இணைந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்தியாவின் வெற்றிக்கு உதவியது.

Comments
ஹைலைட்ஸ்
  • நியூசிலாந்து அணியில் இரண்டு விஷயங்களை பிரதானமாக தெரிவித்தார் போல்ட்
  • "நாங்கள் முழுமையாக ஆட்டத்தை இந்தியாவிடம் இழந்தோம்" - போல்ட்
  • நியூசிலாந்து மற்றும் இந்தியா நாளை இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோதவுள்ளன
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய ட்ரென்ட் போல்ட்
IPL 2020: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறிய ட்ரென்ட் போல்ட்
"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்
"தோனி, ஜடேஜா க்ரீஸில் இருந்தால் எதுவும் நடக்கலாம்" - ட்ரெண்ட் போல்ட்
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!
நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகள்: வில்லியம்சனுக்கு மூன்று விருதுகள்!
"இந்த இரண்டிலும் நியூசிலாந்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது" - போல்ட்
"இந்த இரண்டிலும் நியூசிலாந்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது" - போல்ட்
விநோதமாக ஷாட் ஆடிய போல்ட்.. விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்!
விநோதமாக ஷாட் ஆடிய போல்ட்.. விழுந்து விழுந்து சிரித்த ரோஹித்!
Advertisement