முன்னாள் கிரிகெட் வீரர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது!

Updated: 12 February 2019 12:30 IST

பண்டாரி, இரும்புக்கம்பி மற்றும் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டுள்ளார்.10- 15 பேர் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். போலீஸ் வருகைக்கு முன் தாக்கியவர்கள் ஓடிவிட்டனர்.

Amit Bhandari Assaulted, Two Arrests Made
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், டெல்லி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சேர்மனுமான அமித் பண்டாரி செயிண்ட் ஸ்டீபன் மைதானத்தில் தாக்கப்பட்டார். © ANI/Twitter

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், டெல்லி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சேர்மனுமான அமித் பண்டாரி புதுடெல்லியில் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் மைதானத்தில் தாக்கப்பட்டார்.

23 வயதுக்குட்பட்டோருக்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சிலர் அவரை தாக்கியுள்ளனர். "23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வாகாத‌ சிலர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறப்பட்டது. சண்ட் பரமானந்த் மருத்துவமனையில், தலை மற்றும் கால்களில் காயத்துடன் அனுமதிக்கப்பட்ட அமித் பண்டாரி ஆபத்தான நிலையை தாண்டிவிட்டதாக மருத்துவமனை கூறியுள்ளது.

பண்டாரி, இரும்புக்கம்பி மற்றும் ஹாக்கி மட்டையால் தாக்கப்பட்டுள்ளார்.10- 15 பேர் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். போலீஸ் வருகைக்கு முன் தாக்கியவர்கள் ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் 7 இடங்களில் பண்டாரிக்கு பெரிய காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பான போலீஸ் விசாரணையில் 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்காத அனுஜ் தேடா எனும் இளைஞர் பண்டாரியை நோக்கி 10-15 பேருடன் வந்து தாக்கியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் அனுஜ்ஜும், அவரது சகோதரர் நரேஷும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று துணை காவல் ஆணையர் நுபுர் பிரசாத் தெரிவித்தார்.

அனுஜ் தேடாவின் பெயர் 79 பேர் கொண்ட அணியில் இருந்தது. ஆனால் அவர் 23 வயதுக்குள் இல்லை என்பதால், அடுத்த கட்டத்துக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.

 

டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ராஜத் ஷர்மா இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''பண்டாரியை சந்தித்தேன், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். மருத்துவர்கள் அவரை 24 பணி நேரம் முன்னெச்சரிக்கையாக மருத்துவ கண்காணிப்பில் வைக்க சொல்லியுள்ளனர்" என்று தெரிவித்தார். 

தாக்குதல் நடத்தியவர்கள் அனுஜ்ஜை அணியில் சேர்க்க சொல்லி மிரட்டியுள்ளனர். அவர் நியாயமான முறையில் மறுத்ததால் அவரை தாக்கியுள்ளனர். இது குறித்து கூறிய டெல்லியின் சீனியர் அணி மேனேஜர் ஷங்கர் சைனி அவர்களுக்கு ஆயுள்கால தடை விதிக்க சொல்லி வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு முன்னதாகவே பண்டாரியிடம் வந்து சில வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னரே 15 பேர் ஹாக்கி மட்டை, சைக்கிள் செயின் போன்றவற்றால் பண்டாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுக்க சென்றவர்களை சுட்டுவிடுவோம் என்று மிரட்டியதாகவும் வீரர்கள் கூறினர்.

இவரது தாக்குதலுக்கு சேவாக், கம்பீர், தவான் உள்ளிட்ட வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

Comments
ஹைலைட்ஸ்
  • முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் அமித் பண்டாரி புதுடெல்லியில் தாக்கப்பட்டார்
  • தலை, கால்களில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பண்டாரி
  • போலீஸார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்
தொடர்புடைய கட்டுரைகள்
இனி அணி தேர்வில் போலீஸ் இருக்கும்: பாதுகாப்பை அதிகரித்த டெல்லி கிரிக்கெட் சங்கம்!
இனி அணி தேர்வில் போலீஸ் இருக்கும்: பாதுகாப்பை அதிகரித்த டெல்லி கிரிக்கெட் சங்கம்!
தேர்வுக்குழு சேர்மனை தாக்கிய டெல்லி வீரருக்கு வாழ்நாள் தடை!
தேர்வுக்குழு சேர்மனை தாக்கிய டெல்லி வீரருக்கு வாழ்நாள் தடை!
முன்னாள் கிரிகெட் வீரர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது!
முன்னாள் கிரிகெட் வீரர் தாக்குதல் வழக்கில் இருவர் கைது!
முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி!
முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது தாக்குதல்... மருத்துவமனையில் அனுமதி!
Advertisement