உலகக் கோப்பை 2019: இந்தியாவின் முதல் போட்டிக்கு வாழ்த்து சொன்ன கால்பந்து வீரர்!

Updated: 04 June 2019 16:28 IST

ஜெர்மனி கால்பந்து வீரரான தாமஸ் முல்லர் சமீபத்தில் விராட் கோலுக்கு தன்னுடைய வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

Thomas Mueller Posts Special Message For Virat Kohli Ahead Of South Africa Clash, Twitter Explodes
இந்திய கிரிக்கெட் அணியின் உடை அணிந்து, கையில் பேட்டுடன் புகைப்படம் எடுத்துகொண்டு ட்விட்டரில் வாழ்த்து சொன்னார் தாமஸ் முல்லர். © Twitter/Thomas Mueller

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வரும் புதனன்று சந்திக்கிறது. இந்தப் போட்டி சவுத்தாம்டனில் இருக்கும் ரோஸ் பவுல் மைதானத்தில் நடக்கவுள்ளது. உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய இந்த முதல் போட்டியை ஆடவுள்ளது. உலகில் கிரிக்கெட் இந்திய அணிக்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். பலரும் வாழ்த்து செய்திகள் அனுப்பி, இந்திய அணிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது, கால் பந்து வீரர்களும் இந்திய அணி மற்றும் விராட் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். ஜெர்மனி கால்பந்து வீரரான தாமஸ் முல்லர் சமீபத்தில் விராட் கோலுக்கு தன்னுடைய வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

29 வயதான ஜெர்மன் கால் பந்து வீரர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு தன்னுடைய ஆதரவு மற்றும் வாழ்த்தை தெரிவித்துள்ளார். விராட் கோலி, ஜெர்மன் கால்பந்து அணிக்கு எப்போதும் ஆதரவு அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2014 உலகக் கோப்பையில், ஜெர்மன் கால் பந்து அணி வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணியின் உடை அணிந்து, கையில் பேட்டுடன் புகைப்படம் எடுத்துகொண்டு அதை ட்விட்டரில் பதிவிட்டு, " அனைத்து இந்திய வீரர்களுக்கும் என்னுடைய வாழ்த்து. #WorldCup2019. முக்கியமாக நான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்காக வேண்டிக்கொள்கிறேன். விராட் கோலி ஜெர்மன் கால்பந்து அணியின் ரசிகர். அவர் பலமுறை எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் #Cricket #GermanyCheersForIndia" என்று கூறியிருந்தார்.

தாமஸ் முல்லரின் ட்விட்டர் பதிவு, பதிவிட்ட சில மணி நேரத்திலேயே வைரலானது. இந்திய ரசிகர்கள் அதை பகிர தொடங்கினர்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக செல்ஸே அணியின் நட்சத்திர வீரர் டேவிட் லூயிஸ் இந்திய அணிக்கு தனது ஆதரவளப்பதாகவும், வாழ்த்துக்களையும் கூறினார். இந்த தொடரில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள தென்னாப்பிரிக்காவை தனது முதல் போட்டியில் எதிர்கொள்கிறது இந்தியா. 

இந்திய கேப்டன் விராட் கோலி முதல் முறையாக இந்திய அணியை உலகக் கோப்பையில் வழிநடத்துகிறார். ஒருநாள் போட்டிகளில் 227 போட்டிகளில் ஆடி 10843 ரன்களை குவித்துள்ளார் கோலி. அவரது சராசரி 59.57.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
2வது டி20: "போட்டிக்கு முன்பு உந்துதல் கொடுத்த மஞ்ச்ரேகருக்கு நன்றி" - கோலி!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
டேவிட் மில்லரின் ஒற்றை கை கேட்ச்சைப் பார்த்த கோலியின் வைரல் ரியாக்‌ஷன்!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
"ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள் கோலி" - ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த
Virat Kohli: டி20களிலும் சாதனை நாயகனாக உருவெடுத்த 'கிங்' கோலி
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
"நான் எல்லா வடிவங்களிலும் சிறப்பாக விளையாட ஒன்று மட்டும் தான் காரணம்" - விராட் கோலி!
Advertisement