"உண்மையான சேம்பியன்" - டேல் ஸ்டெயினுக்கு வாழ்த்து சொன்ன விராட் கோலி!

Updated: 06 August 2019 15:28 IST

"விளையாட்டி சிறந்த சேம்பியன் நீங்கள். வேக இயந்திரம் ஓய்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள்" என்று கோலி ட்விட் செய்தார்.

"True Champion": Virat Kohli
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டேல் ஸ்டேயினை, "நீங்கள் ஒரு உண்மையான சேம்பியன்" என்று கூறினார். © AFP

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் (Dale Steyn) டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஓய்வை அறிவித்த பிறகு, அவருக்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறினர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டேல் ஸ்டேயினை, "நீங்கள் ஒரு உண்மையான சேம்பியன்" என்று கூறினார். டேல் ஸ்டெயின் முதம் மூன்று சீசனில் ஆர்சிபி அணியுடன் ஆடினார். பின்னர், டெக்கன் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் லையன்ஸ் அணிகளில் இணைந்தார். பின்னர், 2019ம் ஆண்டு ஐபிஎல்லில் ஆர்சிபியில் இணைந்த ஸ்டெயின் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக நாதன் கோல்டர் நைல் இணைக்கப்பட்டார்.

"விளையாட்டி சிறந்த சேம்பியன் நீங்கள். வேக இயந்திரம் ஓய்வு பெற்றதற்கு வாழ்த்துக்கள்" என்று கோலி ட்விட் செய்தார்.

2004ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சிவப்பு பந்து போட்டியில் முதல் முறையாக பங்கேற்றார் ஸ்டெயின். 36 வயதான இவர் 93 போட்டிகளை தென்னாப்பிரிக்காவுக்காக ஆடி, 22.95 சராசரியுடன் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

"நான் அதிகம் விரும்பும் போட்டியான டெஸ்ட்டிலிருந்து நான் விடைபெறுகிறேன்," என்றார் 36 வயதான ஸ்டெயின், நியூசிலாந்து அணியின் முன்னணி விக்கெட் டேக்கர் மற்றும் டாப் 10 முன்னணியில் இருப்பவர்.

"என்னுடைய கருத்து படி, கிரிக்கெட்டில் சிறந்தது டெஸ்ட் போட்டிகள் தான். அது தான் உங்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சோதிக்கிறது. மீண்டும் ஒருபோதும் மற்றொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில்லை என்று கருதுவது கடினமாக உள்ளாது, ஆனால் இதைவிட பயங்கரமான விஷயம் என்னவென்றால், மீண்டும் ஒருபோதும் விளையாடக்கூடாது என்ற எண்ணம்" 

"அதனால், நான் ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் கவனம் செலுத்தி, என்னால் சாத்தியமானவற்றை கிரிக்கெட்டுக்காக செய்வேன். குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில் நான் கவனம் செலுத்தி விளையாடுவேன்" என்றார்.

"உலகக் கிரிக்கெட்டில் தனித்து நிற்கக் கூடியவர். தான் சிறப்பாக ஆடியதோடு, அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர்," வருத்தத்துடன் மோரே கூறினார்.

"எல்லாவற்றுக்கும் மேலாக அவர் எங்கள் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு அற்புதமான வழிகாட்டியாக இருந்துள்ளார்."

அதிகபடியான காயங்கள் காரணமாக ஃபீல்ட்டை விட வெளியில் அதிக நேரம் செலவழித்தார் ஸ்டெயின்.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயணம் காரணமாக அவர் 2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்காக ஒரு போட்டியில் கூட இடம்பெறவில்லை.

உலகக் கோப்பைக்கு முன்னதாக ஸ்டெயின், ஐபில் போட்டிகளில் ஆடி வந்தார். ஆனால், காயம் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் அவர் இடம்பெறவில்லை. காயம் குணமடையாத காரணத்தினால், அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார்.

ஸ்டெயின் கடைசியாக பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடினார். 2019-20 தொடருக்கான வெள்ளை பந்து போட்டியின் ஒப்பந்தத்தில் உள்ளார். இதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெறுவார் ஸ்டெயின்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
New Zealand vs India 2nd T20: 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
"போட்டியை முடிக்கும் கலையை ரோஹித் மற்றும் கோலியிடம் கற்றுக்கொண்டேன்" - ஸ்ரேயாஸ்
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
முதல் டி20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா!
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
இந்தியா vs நியூசிலாந்து முதல் டி20: நேரலையை எங்கு, எப்போது காணலாம்?
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
உள்நாட்டு தொடர் வெற்றிக்கு பிறகு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை தொடங்கியது இந்தியா!
Advertisement