"விராட் கோலி ஒரு வியப்பான வீரர்" - இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் குரான்!

Updated: 30 January 2019 12:21 IST

2020-ம் ஆண்டுக்கான ஆண்கள் டி20 உலகக் கோப்பை அட்டவணையில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரு தகுதிச்சுற்று அணிகள் இடம்பெற்றுள்ளன.

Tom Curran Praises Virat Kohli, Calls Him "Unbelievable Player"
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. © AFP

2020-ம் ஆண்டுக்கான ஆண்கள் டி20 உலகக் கோப்பை அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி. இதில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரு தகுதிச்சுற்று அணிகள் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்து வீரர் ஆல் ரவுண்டர் டாம் குரான், இந்திய கேப்டன் விராட் கோலியை எதிர்கொள்ள ஆவலாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்திய கேப்டனை எப்படி வீழ்த்துவீர்கள் என்ற கேள்விக்கு "கண்டிப்பாக நோ பாலில் வீழ்த்த மாட்டேன். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விராட் ஒரு வியப்பான வீரர். நம்பமுடியாத ஃபார்மில் இருப்பவர்" என்றார்.

"ஆஸ்திரேலியாவில் டி20 போட்டிகளிலும், பெரிய தொடர்களிலும் ஆடுவது எப்போதுமே மகிழ்ச்சி தரக்கூடியது" என்றார்.

"இங்குள்ள ரசிகர்கள், ஆரவாரம் எல்லாமே 50 ஓவர் போட்டிகளிலேயே அபாரமாக இருக்கும், 20 ஓவர் போட்டிகளுக்கு சொல்லவே தேவையில்லை. பிக்பேஷ் போட்டிகளே அதற்கு உதாரணம்" என்றார் குரான்.

"2016 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் ஓவரில், ப்ராத்வொயிட் 4 சிக்ஸர்களை அடித்து இங்கிலாந்தின் கோப்பை கனவை கலைப்பார். அதிலிருந்து ஸ்டோக்ஸ் மீண்டு வந்து, 2020 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடுவார்" என்று கூறினார்.

இங்கிலாந்து டி20 அணிகள் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • "விராட் கோலியை எதிர்கொள்ள ஆவலாக உள்ளேன்" டாம் குரான்
  • "டி20 போட்டிகளில் ஆடுவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது" குரான்
  • "பென் ஸ்டோக்ஸ்,2020 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடுவார்" குரான்
தொடர்புடைய கட்டுரைகள்
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!
திருமண நாளில் விராட் கோலி அனுஷ்காவுக்கு கொடுத்த பரிசு இதுதான்!
திருமண நாளில் விராட் கோலி அனுஷ்காவுக்கு கொடுத்த பரிசு இதுதான்!
India vs West Indies: தன்னுடைய சிக்ஸரை பார்த்து ரசித்த விராட் கோலி
India vs West Indies: தன்னுடைய சிக்ஸரை பார்த்து ரசித்த விராட் கோலி
India vs West Indies : 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா #Highlights
India vs West Indies : 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா #Highlights
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
திருமண நாளில் அனுஷ்கா ஷர்மாவுக்கு "நன்றி" தெரிவித்த விராட் கோலி!
Advertisement