"ரொம்ப ஸ்பெஷல்" ஆஸ்திரேலிய தொடருக்கு முன் ரோஹித்தின் டாடி ட்யூட்டி!

Updated: 14 February 2019 12:07 IST

இந்திய வீரர் ரோஹித் ஷர்மா தனது குழந்தை சமைராவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் சமைராவின் க்யூட் ரியாக்‌ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

Rohit Sharma Enjoys Daddy Duty With Daughter Samaira. See Adorable Pic
ரோஹித் ஷர்மாவுக்கு டிசம்பர் 31ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. © Instagram

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடருக்கு பின் நாடு திரும்பியுள்ள இந்திய வீரர் ரோஹித் ஷர்மா தனது குழந்தை சமைராவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் சமைராவின் க்யூட் ரியாக்‌ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பதிவில் "இந்தியாவுக்கு திரும்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சியானது. அதில் இது மிகவும் ஸ்பெஷல்" என்று குறிப்பிட்டுள்ளார். ரோஹித், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிப்ரவரி 24ம் தேதி துவங்கும் தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தேர்வுக்குழுவினர் பிப்ரவரி 15ம் தேதி ஆஸ்திரேலிய தொடருக்கான அணியை தேர்வு செய்கிறார்கள். உலகக் கோப்பை 2019 இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. அதில் பங்கு கொள்வதற்காகவும், சமீபத்திய அதிக வேலைப்பளு காரணமாக சில வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This is special, so good to be back

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

44 வருடங்களில் இந்தியா இரண்டு முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கடைசியாக 2011ம் ஆண்டு தோனி தலைமையிலான அணி வென்றது. தற்போது கோலி தலைமையிலான அணியில் அனுபவ வீரராக தோனி இடம்பெற்றுள்ளார்.

உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த தொடருக்கான தேர்வு அமையும் என்று மும்பை தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

தேர்வுக்குழு சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்க நினைத்தாலும் அணியின் சமநிலை குறையாமல் பார்த்துக் கொள்ளும் என்றும், எந்த நேரத்திலும் ஆஸ்திரேலியாவை சிறப்பாக செயல்பட அனுமதிக்காத அணியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடருக்கு பிறகு குழந்தையை சந்தித்தார் ரோஹித்
  • சமைரா தூங்குவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டார் ரோஹித்
  • இந்த க்யூட் ஃபோட்டோவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்
தொடர்புடைய கட்டுரைகள்
"வேறு எதுவும் சிறப்பானதாக இருக்க முடியாது" - மனைவிக்கு ரோஹித் ஷர்மா வாழ்த்து
"வேறு எதுவும் சிறப்பானதாக இருக்க முடியாது" - மனைவிக்கு ரோஹித் ஷர்மா வாழ்த்து
"ஹர்திக், ராகுல் கால்பந்து வீரர்களை பின்பற்றுகிறார்கள்" - ரோஹித் ஷர்மா
"ஹர்திக், ராகுல் கால்பந்து வீரர்களை பின்பற்றுகிறார்கள்" - ரோஹித் ஷர்மா
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!
ஐசிசி தரவரிசையில் முன்னேறிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்!
India vs West Indies: தனது மகளுடன் சைகையில் பேசிய ரோஹித் ஷர்மா!
India vs West Indies: தனது மகளுடன் சைகையில் பேசிய ரோஹித் ஷர்மா!
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
"மோசமான ஃபீல்டிங்" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்!
Advertisement