Listen to the latest songs, only on JioSaavn.com
 

2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை: தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற நாள் இன்று!

Updated: 24 September 2019 16:21 IST

2007ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில், தோனி தலைமையிலான அணி வெற்றி பெற்ற நாள் இன்று.

MS Dhoni Led India To T20 World Cup Win On This Day In 2007, BCCI Shares Flashback Video. Watch
தோனி இப்போது கிரிக்கெட்டிருந்து ஓய்வு பெற்றுள்ளார். © Twitter

2007ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில், தோனி தலைமையிலான அணி வெற்றி பெற்ற நாள் இன்று. பிசிசிஐ செவ்வாயன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த உச்சிமாநாட்டில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது என்ற ஃப்ளாஷ்பேக் வீடியோவைப் பகிர்ந்துள்ளது."2007ம் ஆண்டு இந்த நாளில் #TeamIndia உலக டி20 சாம்பியன்ஸ் என்ற வெற்றி பெற்றது," வீடியோவுடன் இதை பகிர்ந்தது பிசிசிஐ. 16 விநாடிகள் நீளமுள்ள இந்த வீடியோ ரசிகர்களை ஏக்கமடையச் செய்ததுடன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனிக்கு போட்டிகளில் இருந்து தனது மறக்கமுடியாத படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்ததற்கு நன்றி தெரிவித்தனர். குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, எம் எஸ் தோனி இந்தியாவை 2011ம் ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட இரண்டாவது உலகக் கோப்பை பட்டத்தை பெற உதவினார்.

பேட்டிங் தேர்வு செய்த பின்னர், கவுதம் கம்பீர் 75 ரன்கள் குவித்ததால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 ஓவர்களில் 157/5 ரன்கள் எடுத்தது இந்தியா.

போட்டியின் இலக்கை துரத்தும்போது, ​​பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மிஸ்பா-உல்-ஹக் இறுதி ஓவர் வரை நம்பிக்கையை உயிரோடு வைத்திருந்தார்.

கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் தோனி மிஸ்பாவை அவுட் ஆக்க பந்தை ஜோகிந்தர் ஷர்மாவிடம் ஒப்படைத்தார். ஸ்ரீசாந்த் போட்டியில் சிறப்பான கேட்ச் பிடித்து அவரை அவுட் ஆக்கினார்.

உலகக் கோப்பையை பெற உதவிய தோனி, ஸ்ரீசாந்த் மற்றும் மற்ற குழு உறுப்பினர்களுக்கு நன்றி குறிப்புகளுடன் ரசிகர்கள் பி.சி.சி.ஐ பதிவில் பதிலளித்தனர்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி 2014ம் ஆண்டு ஓய்வு பெற்றார். 2019 உலகக் கோப்பைக்கு பிறகு தோனி, எந்த போட்டியிலும் இடம்பெறவில்லை. மேறகிந்திய சுற்றுப்பயணம் மற்றும் தென்னாப்பிரிக்காவுடனான போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.

டிசம்பர் மாதம் நடக்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தோனி இடம்பெறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொடர் டிசம்பர் 6ம் தேதி தொடங்கவுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர் தோனிக்கு அளித்த முக்கிய ஆலோசனை!
போதும்... கெளம்பு, கெளம்பு...- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
'போதும்... கெளம்பு, கெளம்பு...'- கோலி - பீட்டர்சன் நேர்காணல்... நடுவில் புகுந்த அனுஷ்கா ஷர்மா!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
தோனி, ஆர்சிபி, கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் முதல் சரிவு வரை - ‘கிங்’ கோலியின் ஓபன் டாக்!
2011 உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்த யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா!
2011 உலகக் கோப்பை நினைவுகளைப் பகிர்ந்த யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா!
“ஒரு சிக்ஸர் மீதான அதீத விருப்பத்தைக் கைவிடுங்கள்” -  2011 உலகக் கோப்பை வெற்றி குறித்து கம்பீர்!
“ஒரு சிக்ஸர் மீதான அதீத விருப்பத்தைக் கைவிடுங்கள்” - 2011 உலகக் கோப்பை வெற்றி குறித்து கம்பீர்!
Advertisement