ரன் எடுக்கும் போது இரண்டுமுறை வழுக்கி விழுந்த ட்ரஸ்கோத்திக்!

Updated: 11 May 2019 09:42 IST

இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க்கஸ் ட்ரஸ்கோத்திக் ரன் எடுக்க ஓடும்போது இரண்டு முறை வழுக்கி விழுந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Marcus Trescothick Falls Twice While Running Between Wickets - Watch
2019 வரை சம்மர்சாட் அணியுடனான ஒப்பந்தத்தை ட்ரஸ்கோத்திக் நீட்டித்துள்ளார்.  © Screengrab @SomersetCCC

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் ஆட்டம்தான். சிலநேரங்களில் அதில் நகைச்சுவையான நிகழ்வுகள் நிகழும். அதுபோன்ற ஒரு நகைச்சுவையான நிகழ்வு கவுண்டி கிரிக்கெட்டில் நடந்துள்ளது. இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க்கஸ் ட்ரஸ்கோத்திக் ரன் எடுக்க ஓடும்போது இரண்டு முறை வழுக்கி விழுந்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சம்மர்சாட் அணிக்காக ஆடிய ட்ரஸ்கோத்திக் எதிர்முனையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு ரன் ஓட வேண்டிய நிலையில் இரண்டு முறை வழுக்கி விழுந்தார். அதற்கு ஸ்லிப் ஃபீல்டர் நகைச்சுவையான ரியாக்‌ஷனை கொடுத்தார்.

இந்த நிகழ்வு சம்மர்சாட் மற்றும் சர்ரே அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடைபெற்றது. நார்தாம்ப்டன்சையர் மற்றும் கெண்ட் அணிகளுடன் சம்மர்சாட் கடந்த மாதம் வெற்றியை பதிவு செய்திருந்தது.

2019 வரை சம்மர்சாட் அணியுடனான ஒப்பந்தத்தை ட்ரஸ்கோத்திக் நீட்டித்துள்ளார். 

சம்மர்சாட கவுண்டி அணியை நீங்கள் நினைத்தால் ட்ரஸ்கோத்திக் நினைவுக்கு வருவார் என்று மேலாளர் ஆண்டி ஹுர்ரே தெரிவித்துள்ளார்.

43 வயதாப ட்ரஸ்கோத்திக் 1993ம் ஆண்டிலிருந்து முதல்தர போட்டிகளில் ஆடி வருகிறார். 26000 முதல்தர போட்டி ரன்களை குவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 76 டெஸ்ட்களில் ஆடி 5825 ரன்களை குவித்துள்ளார்.

2000-06 வரை ஆடிய அவர் 2005ம் ஆண்டு ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"இது கிரிக்கெட் அல்ல" - உலகக் கோப்பை பவுண்டரி விதி குறித்து கேன் வில்லியம்சன்!
"இது கிரிக்கெட் அல்ல" - உலகக் கோப்பை பவுண்டரி விதி குறித்து கேன் வில்லியம்சன்!
டி20 போட்டியை முன் கணிப்பு செய்த மைக்கேல் வாகனை... ட்ரோல் செய்த ரசிகர்கள்!
டி20 போட்டியை முன் கணிப்பு செய்த மைக்கேல் வாகனை... ட்ரோல் செய்த ரசிகர்கள்!
காயம் காரணமாக வெளியேறிய கேன் வில்லியம்... கேப்டனான டிம் சவுதி!
காயம் காரணமாக வெளியேறிய கேன் வில்லியம்... கேப்டனான டிம் சவுதி!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
பவுண்டரி விதிகளை மாற்றியது ஐசிசி - வரவேற்கும் சச்சின் டெண்டுல்கர்!
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
"ஸ்டூவர்ட் பந்தில் யுவராஜ் நிகழ்த்திய மேஜிக்" - நினைவுகூர்ந்த ரவி சாஸ்திரி!
Advertisement