"கேஎஸ் பரத் கடும் போட்டியாளராக இருந்தார்" - தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்!

Updated: 22 July 2019 12:42 IST

ரிஷப் பன்ட், ரித்திமான் சாஹா, கேஎஸ் பரத் ஆகிய மூவரும் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர்களாக திகழ்வார்கள் என்று பிரசாத் தெளிவிப்படுத்தினார்.

KS Bharat Came Very Close On Earning Test Spot, Says Chief Selector MSK Prasad
கடந்த மூன்று தொடர்களில் மூன்று சதங்கள் அடித்துள்ளார் கேஎஸ் பரத். © Twitter

இந்திய அணியின் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் அணியை நேற்று அறிவித்தார். இந்தியா ஏ பிரிவில் ஆடிய இளம் வீரர்களில் செயல்பாட்டை வைத்து, இந்த சுற்றுப்பயணத்துக்கு புதிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 25 வயதான கேஎஸ் பரத், டெஸ்ட் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால், கேஎஸ் பரத்தின் செயல்பாடும் பிடித்த போன எம்எஸ்கே பிரசாத், இந்த ஆண்டுக்குள் பரத் விரைவில் வேறு போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறியுள்ளார். ரிஷப் பன்ட், ரித்திமான் சாஹா, கேஎஸ் பரத் ஆகிய மூவரும் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர்களாக திகழ்வார்கள் என்று பிரசாத் தெளிவிப்படுத்தினார்.

இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘இந்திய ‘ஏ' அணியின் செயல்பாட்டை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டோம். ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே ஆகியோர் இந்திய ‘ஏ' அணியில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் நவ்தீப் சைனி சிறப்பாக விளையாடினார்" என்றார். 

டெஸ்ட் போட்டிக்கான அணித் தேர்வில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கேஎஸ் பரத் கடும் போட்டியாளராக விளங்கினார். ஆனால், சகா அனுபவம் மற்றும் செயல்பாடு அடிப்படையில் கேஎஸ் பரத்தை முந்தியுள்ளார். கேஎஸ் பரத் இந்திய ‘ஏ' அணிக்காக கடைசி 11 போட்டிகளில் 686 ரன்கள் குவித்துள்ளார்.

"சிறந்து செயல்பட்ட வீரர் ஒருவர் காயம் ஏற்பட்டு விலகி பின் திரும்பினால், அவருக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தான் விருத்திமன் சாஹாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

"ஆனால், கேஎஸ் பரத் இந்தியா ஏ அணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதன் மூலம் அவருக்கு எதிர்காலத்தில் பல வாய்ப்புகள் கிடைக்கவுள்ளது. கடந்த மூன்று தொடர்களில் மூன்று சதங்கள் அடித்துள்ளார். மேலும், 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது சிறப்பாக ஒரு விஷயம், இவர் ரிஷப் பன்ட்டுக்கு இணையாக இருக்கிறார். எதிர்காலத்தில் ரிஷப் பன்ட், ரித்திமான் சாஹா, கேஎஸ் பரத் ஆகியோருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பை எதிர்பார்க்கலாம்" என்றார்.

பரத், இந்த கிரிக்கெட் வடிவ போட்டியில், 38.75 சராசரி வைத்துள்ளார். மேலும் அவர், 8 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் குவித்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் பட்டியலில் கேஎஸ் பரத் இடம்பெற்றுள்ளார்
  • சமீபத்தில் இந்தியா ஏ பிரிவில் சதம் அடித்தார் பரத்
  • ஸ்டம்ப்பிங் செய்வதிலும் வல்லவராக திகழ்கிறார் கேஎஸ் பரத்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவுக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் ஏ அணியில் யார் யாருக்கு இடம்?
இந்தியாவுக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் ஏ அணியில் யார் யாருக்கு இடம்?
மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
மீண்டும் சொதப்பிய பன்ட்... விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
"நல்லவேளை விரல் உடையவில்லை" - 3வது ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி!
"நல்லவேளை விரல் உடையவில்லை" - 3வது ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
'பேக் டு பேக்' சதமடித்த கோலி....தொடரை வென்ற இந்தியா...!
Advertisement