''அவுட் இல்லை ஆனால் அவுட்'' கிரிக்கெட்டில் நடந்த குழப்பம்!

Updated: 20 December 2018 12:52 IST

பிரிஸ்பென் ஹீட்டின் கேம்ஸ் பேட்டின்சன் அடிலெய்டு வேகப்பந்து வீச்சாளர் பென் லாக்லினின் பந்துவீச்சில் ரன் எடுக்க முயன்ற போது ரன் அவுட் செய்யப்பட்டார்.

BBL: Adelaide Strikers Withdraw James Pattinson
அடிலெய்டு கேப்டன் காலின் இங்ராம் பேட்டின்சனை மீண்டும் அழைத்து பேட் செய்ய வைத்தார். © Screengrab: cricket.com.au

ஆஸ்திரேலிய பிக்பேஷ் லீக் 2018-19 தொடரில் அடிலெய்டு மற்றும் பிரிஸ்பென் இடையேயான போட்டியில் நடந்த நிகழ்வு வைரலாகிவருகிறது. பிரிஸ்பென் ஹீட்டின் கேம்ஸ் பேட்டின்சன் அடிலெய்டு வேகப்பந்து வீச்சாளர் பென் லாக்லினின் பந்துவீச்சில் ரன் எடுக்க முயன்ற போது ரன் அவுட் செய்யப்பட்டார். இது மூன்றாம் நடுவரின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டது. 

டிவி திரையில் பேட்டின்சன் ஸ்டெம்பில் பந்து படும்போது க்ரீஸுக்குள் வந்தது தெளிவாக தெரிந்தது. ஆனால் திரையில் அவுட் என வந்தது. வீரர்களும், நடுவர்களும் குழப்பத்தில் இருந்தனர். பேட்டின்சன் களத்தைவிட்டு அதிருப்தியுடன் வெளியேறினார். ஆனால் அடிலெய்டு கேப்டன் காலின் இங்ராம் பேட்டின்சனை மீண்டும் அழைத்து பேட் செய்ய வைத்தார்.

இது குறித்து கூறிய காலின் இங்ராம், ''இது சில விதிவிலக்கான தருணங்கள். இது குறித்து லாக்லினிம் தான் முதலில் கேட்டேன். அவர் தான் திரும்ப அழைக்கலாம் என்ற யோசனையை அளித்தார். எங்களுக்கே தெரிகிறது. அது அவுட் இல்லை என்று. அப்படியும் அதனை நாங்கள் ஏற்றால் அது முட்டாள்தனமானதாக இருக்கும்'' என்றார்.

மேலும் "நாங்கள் போட்டியை நல்ல முறையில் ஆட வேண்டும்" என்று விரும்புவதாக கூறினார். இருந்தும் பேட்டின்சனால் வெறும் 1 ஓவர் மட்டுமே கூடுதலாக தாக்குபிடிக்க முடிந்தது. கூடுதலாக 4 ரன்கள் சேர்த்து கீப்பர் அலெக்ஸ் கேரியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சுவற்றில் கையை குத்தியதால் காயம்... விரக்தியை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ்!
சுவற்றில் கையை குத்தியதால் காயம்... விரக்தியை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
"தொடக்க வீரராக களமிறங்க கெஞ்ச வேண்டியிருந்தது" - சச்சின் டெண்டுல்கர்!
"தொடக்க வீரராக களமிறங்க கெஞ்ச வேண்டியிருந்தது" - சச்சின் டெண்டுல்கர்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் சாதனைகள்!
Ashes 2019: ஸ்டீவ் ஸ்மித்தின் ஆஷஸ் சாதனைகள்!
Advertisement