ஆசிய கோப்பையின் அனைத்துப் போட்டிகளுக்கும் சர்வதேச அந்தஸ்து- ஐசிசி

Updated: 10 September 2018 14:01 IST

ஹாங் காங் அணியைத் தவிர்த்து ஆசிய கோப்பை தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் பங்கேற்க உள்ளன

ICC Awards ODI Status To All Asia Cup 2018 Matches
ஹாங்காங் கிரிக்கெட் வீரர்கள் © Twitter

2018 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடப்படும் அனைத்துப் போட்டிகளுக்கும் சர்வதேச அந்தஸ்து தரப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

வரும் 15 ஆம் தேதி ஆரம்பமாகிறது ஆசிய கிரிக்கெட் கோப்பை 2018. அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் இந்தக் கோப்பைக்கான ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.

இந்தத் தொடரில் ஹாங் காங் அணி மட்டும் தான், இன்னும் ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்து பெறாத நிலையில் இருக்கிறது. ஐசிசி-யின் தற்போதைய அறிவிப்பின் மூலம் ஹாங் காங் விளையாடும் போட்டிகளும் சர்வதேச அந்தஸ்துடைய போட்டிகளாகவே கருதப்படும்.

இந்த அறிவிப்பு குறித்து ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன், ‘கிரிக்கெட் விளையாட்டை கண்டுகளிப்பதற்கு தற்போது 100 கோடி பேர் இருக்கின்றனர். இந்த அளவை உயர்த்த ஐசிசி தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு படியாகவே, ஆசிய கோப்பை குறித்து எடுக்கப்பட்ட முடிவும் ஆகும். பல நாடுகள் விளையாடும் பெரிய தொடர்களில், சில அணிகளுக்கு சர்வதேச ஒருநாள் அந்தஸ்து இருக்கும். சிலருக்கு இருக்காது. இதனால், ரசிகர்கள் போட்டியைப் பார்க்கும் போது குழப்பமடைந்துவிடுவார்கள். அதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு ஐசிசி-யால் எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

ஹாங் காங் அணியைத் தவிர்த்து ஆசிய கோப்பை தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
டிவி ஷோ சர்ச்சை: ராகுல், பாண்ட்யாவுக்கு தலா 20 லட்சம் அபராதம்!
டிவி ஷோ சர்ச்சை: ராகுல், பாண்ட்யாவுக்கு தலா 20 லட்சம் அபராதம்!
கவுண்டி போட்டியில் ஆட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்கும் ரஹானே!
கவுண்டி போட்டியில் ஆட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்கும் ரஹானே!
"ஓய்விலிருந்த போது உடற்தகுதியை ஹர்திக் விடவில்லை" - க்ருணால் பாண்ட்யா
"ஓய்விலிருந்த போது உடற்தகுதியை ஹர்திக் விடவில்லை" - க்ருணால் பாண்ட்யா
ராயுடுவின் கிண்டல் ட்விட்டின் மர்மம் நீக்கிய ப்ரக்யான் ஓஜா!
ராயுடுவின் கிண்டல் ட்விட்டின் மர்மம் நீக்கிய ப்ரக்யான் ஓஜா!
"தோனிதான் உலகிலேயே ஆட்டத்தை சிறப்பாக கணிக்ககூடியவர்" - கோலி புகழாரம்
"தோனிதான் உலகிலேயே ஆட்டத்தை சிறப்பாக கணிக்ககூடியவர்" - கோலி புகழாரம்
Advertisement