The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்

Updated: 17 October 2019 10:10 IST

இங்கிலாந்தில் நடக்கும் இந்த தொடரின் வீரர்கள் ஏலத்தில் கிறிஸ் கெயில், வார்னர், ஸ்மித் ஆகியோர் அதிக அடிப்படை விலை பட்டியலில் உள்ளனர்.

The Hundred: Steve Smith Among Three Most Expensive Australian Players In The Draft
இந்த தொடரில் ஸ்டிவ் ஸ்மித் இடம் பெற்றுள்ளார் © AFP

கிரிக்கெட்டை எடுத்து கொண்டால் டெஸ்ட் போட்டிகளுக்கு பின்பு ஒரு நாள் போட்டிகள் வர துவங்கியது. அதன் பின்பு டி20 போட்டிகள் அறிமுகமானது. தற்போது டி20 யை தாண்டி The Hundred  என புது தொடர் அறிமுகமாகியுள்ளது. ஒரு இன்னிங்ஸுக்கு 100 பந்துகள் மட்டுமே வீசப்படும்

இங்கிலாந்தில் நடக்கும் இந்த தொடரின் வீரர்கள் ஏலத்தில் கிறிஸ் கெயில், வார்னர், ஸ்மித் ஆகியோர் அதிக அடிப்படை விலை பட்டியலில் உள்ளனர். 6 வீரர்கள் கொண்ட இந்த பட்டியலில் மித்சல் ஸ்டார்க், மலிங்கா, ககிசோ ரபடா ஆகியோரும் உள்ளனர். இவர்களின் அடிப்படை விலை 1,25,000 பவுண்ட் (1,59,400 USD) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 அணிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஐந்து அணிக்கு பயிற்சியாளர்களாக இருப்பார்கள். ஷேன் வார்னே, டாம் மூடி ஆகியோரும் பயிற்சியாளராக இருப்பார்கள்.

இங்கிலாந்தை சேர்ந்த 331 வீரர்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்தை சேராத 239 வீரர்கள் இந்த வீரர்கள் ஏலத்தில் இருப்பார்கள். ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், வெஸ்ட் இண்டிஸ் அணியின் ஆண்ட்ரே ரஸ்சல் ஆகியோருக்கு அடிப்படை விலையாக 1,00,000 பவுண்ட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓர் அணி 12 வீரர்களை இந்த ஏலத்தில் தேர்ந்தெடுக்கலாம்.

Comments
ஹைலைட்ஸ்
  • டி20 யை தாண்டி The Hundred என புது தொடர் அறிமுகமாகியுள்ளது
  • அடிப்படை விலை 1,25,000 பவுண்ட் (1,59,400 USD) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
  • இங்கிலாந்தை சேர்ந்த 331 வீரர்கள் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர்.
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Advertisement