டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாராவின் முதல் டி20 சதம்!

Updated: 21 February 2019 18:57 IST

சவுராஷ்ட்ரா அணிக்காக ஆடிய புஜாரா, ரயிலேஸ் அணியுடன் இந்தோரில் நடைபெற ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார்.

Cheteshwar Pujara Scores First T20 Century Of His Career
சத்தீஸ்வர் புஜாரா 29 பந்தில் அரைசதமடித்தார். © AFP

இந்திய கிரிக்கெட் வீரர் சத்தீஸ்வர் புஜாரா, சையது முஷ்டாக் அலி கோப்பையில் ஆடி வருகிறார். இதில் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்துள்ளார். சவுராஷ்ட்ரா அணிக்காக ஆடிய புஜாரா, ரயிலேஸ் அணியுடன் இந்தோரில் நடைபெற ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார். இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக இருக்கும் புஜாரா, டி20 போட்டிகளில் சதமடித்திருப்பது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 61 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 100 ரன்களை குவித்தார். 31 வயதான புஜாரா 5 வருடங்களாக ஐபிஎல் அணிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். ரஞ்சிக்கோப்பை ரன்னர் அப்பான சவுராஷ்ட்ரா 20 ஓவரில் புஜாரா சதத்துடன் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. 

துவக்க வீரர்களாக களமிறங்கிய புஜாரா மற்றும் ஹர்விக் தேசாய் இணை 8.5 ஓவர்களில் 85 ரன்கள் குவித்தது. புஜாரா 29 பந்தில் அரைசதமடித்தார். அதன் பின் வந்த உத்தப்பாவுடன் இணைந்து 82 ரன்களை சேர்த்தார். இந்த இணை அணியை 150 ரன்களை கடக்க உதவியது. 

இதுவரை 58 டி20 போட்டிகளில் ஆடியுள்ள புஜாரா 1096 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 25.48 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 105.18

இதற்கு முன்பு 55 பந்தில் 81 ரன்கள் குவித்ததே இவரது அதிகபட்சமாக இருந்தது. 2016 நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பையில் தான் இந்த ரன்னை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 சதங்களுடன் 521 ரன்கள் குவித்தார் புஜாரா. மேலும் விவிஎஸ் லெட்சுமணனின் 17 சதங்களை கடந்து சாதனை படைத்தார். 

புஜாரா வெளிநாட்டு சுற்றுப்பயணம் ஒன்றில் முதல் முறையாக ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்தது இதுவே முதல் முறை. 

Comments
ஹைலைட்ஸ்
  • டி20 கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சதத்தை நிறைவு செய்துள்ளார் புஜாரா
  • புஜாரா 5 வருடங்களாக ஐபிஎல் அணிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்
  • இதுவரை 58 டி20 போட்டிகளில் ஆடியுள்ள புஜாரா 1096 ரன்களை குவித்துள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாராவின் முதல் டி20 சதம்!
டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாராவின் முதல் டி20 சதம்!
'குட் பாய்' புஜாரா இப்போது 'பாட் பாய்' ஆனார்; ஏன் தெரியுமா..?
''கோலியும், புஜாராவும் சுத்த தங்கம்'' - வெற்றி குறித்து விவ் ரிச்சர்ட்ஸ்!
தோனியை கடந்து முன்னேறிய பண்ட்
தோனியை கடந்து முன்னேறிய பண்ட்
சிட்னி டெஸ்ட்: ஃபாலோ-ஆனை நோக்கி ஆஸி, வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைபட்டது!
சிட்னி டெஸ்ட்: ஃபாலோ-ஆனை நோக்கி ஆஸி, வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைபட்டது!
Advertisement
ss