கிரிக்கெட் : உலக சாம்பியன் இங்கிலாந்தை 85 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து அணி!!

Updated: 24 July 2019 21:36 IST

அயர்லாந்து அணியின் திறமையான ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

England vs Ireland: England 85 All Out Against Ireland In One-Off Test
இங்கிலாந்து - அயர்லாந்து இடையிலான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. © AFP

ஒன்டே கிரிக்கெட்டில் உலக சாம்பியான இங்கிலாந்து அணி கத்துக் குட்டியாக இருக்கும் அயர்லாந்து அணியிடம் 85 ரன்களுக்குள் சுருண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இங்கிலாந்து - அயர்லாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் அதிரடி வீரர் ஜேசன் ராய் ஆகியோர் களத்தில் இறங்கினர். ராய்க்கு இது முதல் டெஸ்ட் போட்டி. இதில் பர்ன்ஸ் 6 ரன்களிலும், ராய் 5 ரன்களிலும் டிம் முர்டாக் பந்துவீச்சில் வெளியேறினர். 

அடுத்து வந்த ஜோ டென்லி கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்தார். அவர் 23 ரன்னிலும், ஜோ ரூட் 2 ரன்னிலும் மார்க் அடைர் பந்து வீச்சில் அவுட் ஆனார்கள். 

அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டா, மொயின் அலி, க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். ஒன்டே மேட்சில் உலக சாம்பியனாக இருந்தபோதும், கத்துக்குட்டியான அயர்லாந்திடம் 23.4 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

தற்போது அயர்லாந்து அணி பேட் செய்து வருகிறது. அந்த அணியின் டிம் முர்டாக் 9 ஓவர் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க் அடைர் 3 விக்கெட்டுகளையும், போய்ட் ராங்கின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 
 

Comments
ஹைலைட்ஸ்
  • Tim Murtagh picked up five wickets against England at Lord's
  • Three England batsmen were dismissed on zero
  • England's first innings ended at 85 in the one-off Test against Ireland
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் : உலக சாம்பியன் இங்கிலாந்தை 85 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து அணி!!
கிரிக்கெட் : உலக சாம்பியன் இங்கிலாந்தை 85 ரன்களில் சுருட்டிய அயர்லாந்து அணி!!
கிரிக்கெட்டில் வரலாற்றிலேயே இப்படியொரு சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை..!
கிரிக்கெட்டில் வரலாற்றிலேயே இப்படியொரு சாதனை நிகழ்த்தப்பட்டதில்லை..!
Advertisement