‘டெஸ்ட் கிரிக்கெட்தான் மகத்துவமானது!’- மனம் திறந்த விராட் கோலி

Updated: 29 August 2018 17:48 IST

மிக ஆக்ரோஷமான ஆட்டத்தைக் கொண்ட கோலிக்கு மிகவும் பிடித்தது டெஸ்ட் கிரிக்கெட்டைத்தான்.

India vs England: Virat Kohli Professes His Love For
© AFP

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அனைத்து வித ஃபார்மெட்களிலும் கலக்கி வரும் நபர் ஆவார். மிக ஆக்ரோஷமான ஆட்டத்தைக் கொண்ட கோலிக்கு மிகவும் பிடித்தது டெஸ்ட் கிரிக்கெட்டைத்தான்.

இது குறித்து அவர், ‘உங்களுக்கு கிரிக்கெட் புரிந்தது என்றால், நீங்கள் கிரிக்கெட்டை விரும்பினீர்கள் என்றால், டெஸட் கிரிக்கெட்டின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ள முடியும். அது தான் உச்சபட்ச கிரிக்கெட் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடினால் அடையும் மன மகிழ்வு குறித்து என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அது விளையாடுவதற்கு அவ்வளவு சிரமமானது. அதற்கு ஒன்றும் ஆகப் போவதில்லை’ என்றார்.

டி20 கிரிக்கெட், அதிக போட்டிகள் மூலம், விளையாட்டின் தலையெழுத்தே மாறிக் கொண்டிருப்பது பற்றி விராட், ‘நான் கடுப்படைகிறேன் என்று சொல்ல முடியாது. ஆனால், தொடர்ச்சியாக அதிக போட்டிகள் விளையாடுவதால் சில சமயம் சலிப்படைகிறேன். இதைப் போன்ற மாற்றம் கிரிக்கெட்டின் உண்மை தன்மையைக் குலைக்கிறது. அது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது’ என்று மனம் வருந்தி பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர், ‘டி20 போட்டிகள் அதிக அளவில் விளையாடப்பட்டு வருகிறது. எனவே, முதல் தர கிரிக்கெட்டுக்கு அந்தந்த நாட்டின் கிரிக்கெட் சங்கங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று முடித்தார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டி20, ஒருநாள் தொடரை முடித்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி, 1 - 2 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது. ஆனால், 3வது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியதால் இந்தியா, உற்சாகத்தில் இருக்கிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் போட டு பிளெசிஸ் வர மாட்டார்... ஏன்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட்: எங்கு, எப்போது பார்க்கலாம்?
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Advertisement