"கிரிக்கெட் ஆட சச்சின்தான் காரணம்" - பெண்கள் அணி வீராங்கனை ஷஃபாலி

Updated: 06 September 2019 13:56 IST

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்ரும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. அதற்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

Sachin Tendulkars Swansong At Lahli Inspired Rohtak-Born Shafali Verma To Play For India
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளும் 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. © Twitter

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. அதற்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணியை மிதாலி ராஜும், டி20 அணியை ஹர்மன்ப்ரீத் கவுரும் வழிநடத்துவார்கள் என்று கூறியுள்ளது. மிதாலிராஜ் கடந்த 3ம் தேதி டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளதால் 15 வயதான் ஷஃபாலிக்கு வாய்ப்பு வழங்கப்ப்ட்டுள்ளது. அணிக்கு தேர்வாகியுள்ள ஷஃபாலி கூறும் போது சச்சின் டெண்டுல்கரின் கடைசி ரஞ்சிக்கோப்பை ஆட்டம் நடந்த லஹ்லி மைதானம்தான் அவர் கிரிக்கெட்டராக காரணம் என்று கூறியுள்ளார்.

சச்சினுக்கு கிடைத்த மரியாதை என்ன வியப்பில் ஆழ்த்தியது. அப்போதுதான் ஒரு கிரிக்கெட்டராக வேண்டும் என்ற எண்ணம் உதித்ததாக கூறினார் ஷஃபாலி.

"நான் இந்த நாளை மறக்கவே மாட்டேன். என கிரிக்கெட் வாழ்க்கை இங்கிருந்து துவங்குவது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். 

10 வயதில் கிரிக்கெட் ஆடத்துவங்கிய இவர் ஹரியான அணிக்காக ஏற்கெனவே மூன்று சீசன்களில் ஆடிவிட்டார். இவர்தான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட குறைந்த வயதில் உள்ள வீராங்கனையாவார்.

உள்ளூர் பெண்கள் தொடரில் 56 பந்தில் 128 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். இந்த இன்னிங்ஸ்தான் இவரை இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்ய வைத்துள்ளது.

பெண்கள் டி20 சேலஞ்சிலும் 31 பந்தில் 34 ரன்கள் குவித்து சர்வதேச வீரர்களுக்கு நடுவே தனித்திறனை காட்டினார். 

சச்சின் தான் அவர் கிரிக்கெட் ஆட மிகப்பெரிய இன்ஸ்ப்ரேஷன் என்று கூறியுள்ள்ளார். 

தனது தந்தை அவரது ஆட்டத்தை பெரிதும் விரும்பவதாகவும், அவர் தனது கனவுக்களுக்கு ஒருபோதும் தடை போட்டதில்லை என்றும், அகாடமிக்கு அவரே அழைத்து வந்து விடுவார் என்றும், தற்போது தானும் சகோதரரும் கிரிக்கெட் ஆடி வருவதாகவும் கூறினார்.

அவரது பிரதான ஷாட் எது என்ற கேள்விக்கு, "ஸ்பின்னர்களின் பந்தை இறங்கி வந்து சிக்ஸருக்கு அனுப்புவது" என்றார்.

அணியில் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரித் கவுரை மிகவும் பிடிக்கும் என்றார்.

அணி விவரம்:

இந்திய பெண்கள் ஒருநாள் அணி:

மிதாலி ராஜ், ஜெமினா, ஹர்மன்ப்ரீத், ராத், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, தனியா பாட்டியா, ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, மான்ஸி ஜோஷி, எத்தா பஸ்ட், பூனம் யாதவ், ஹேமலதா, ராஜேஸ்வரி கெய்க்வாட்,ப்ரியா பூனியா

இந்திய பெண்கள் டி20 அணி:

ஹர்மன்ப்ரீத், ஜெமினா, பூனம் யாதவ், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, தனியா பாட்டியா,  ஷிகா பாண்டே, மான்ஸி ஜோஷி,அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்ட்ரகர், ராதாயாதவ், பூனம் யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லின் டியோல், ஷஃபாலி

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
முத்தரப்புத் தொடரின் 5வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!
முத்தரப்புத் தொடரின் 5வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா!
இங்கிலாந்து பெண்கள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய பெண்கள் அணி!
இங்கிலாந்து பெண்கள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய பெண்கள் அணி!
வெளியானது ஷபாஷ் மிது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... நன்றி தெரிவித்த மிதாலி ராஜ்!
வெளியானது 'ஷபாஷ் மிது' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... நன்றி தெரிவித்த மிதாலி ராஜ்!
இந்த ஆண்டின் ஐசிசி மகளிர் ஒருநாள், டி20 அணிகளில் இடம்பெற்ற ஸ்மிருதி மந்தனா!
இந்த ஆண்டின் ஐசிசி மகளிர் ஒருநாள், டி20 அணிகளில் இடம்பெற்ற ஸ்மிருதி மந்தனா!
West Indies Women vs India Women: 3வது டி20 போட்டியில் வென்று இந்தியா முன்னிலை
West Indies Women vs India Women: 3வது டி20 போட்டியில் வென்று இந்தியா முன்னிலை
Advertisement