கேரள ரசிகருடனான சிறப்பான நேரம் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்!

Updated: 11 September 2019 19:00 IST

சச்சின் டெண்டுல்கரை தவிர்த்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய ரஹானேவும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

"Happy Onam To Everyone": Sachin Tendulkar Leads Wishes On Twitter
இந்திய பேட்டிங் லெஜண்ட், கேரளாவில் கால்கள் வைத்து வரையும் ஓவியர் ஒருவரை சந்தித்தார். © Twitter

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்து கூறியதோடு, அண்மையில் கேரள சென்றிருந்த போது தனக்கு ஏற்பட்ட ஒரு சிறப்பு உரையாடலை நினைவு கூர்ந்தார். இந்திய பேட்டிங் லெஜண்ட், கேரளாவில் கால்கள் வைத்து வரையும் ஓவியர் ஒருவரை சந்தித்தார். "எல்லோரும் ஓணம் வாழ்த்துக்கள். இந்த பண்டிகை காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அளிக்கட்டும்! சமீபத்தில் கேரளா சென்றிருந்த போது பிரனவை சந்திக்க நேர்ந்தது. கால்கள் வைத்து வரையக் கூடியவர். அவரின் செயலைப் பார்த்து ஆச்சரியடைந்தேன். இது எனக்கு கேரளத்தின் உணர்வை வெளிப்படுத்தியது," என்று சச்சின் ட்விட் செய்தார்.

சச்சின் டெண்டுல்கரை தவிர்த்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடிய ரஹானேவும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னாவும் வாழ்த்து தெரிவித்தார்.

நேஷ்னல் ஸ்போர்ட்ஸ் டேவில் சச்சின் மீண்டும் விளையாட நேரம் செலவழித்தார். 46 வயதான சச்சின், பாலிவுட் நடிகர்களான வருண் தவான் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருடன் இணைந்து ஆடினார்.

சச்சின் டெண்டுல்கர் 2013ம் ஆண்டு அனைத்து விதமாக போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார். கிரிக்கெட் வரலாற்றிலேயே 100 சர்வதேச சதங்கள் குவித்த ஒரே வீரர் டெண்டுல்கர். 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 18,426 ரன்களும் குவித்துள்ளார்.

ஜூலை மாதம், டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் மற்றும் இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் வீரர் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருடன் இணைக்கப்பட்டார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
#OnthisDay சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நாள் இன்று!
#OnthisDay சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நாள் இன்று!
புதிய வகை சிலந்திக்கு சச்சின் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது!
புதிய வகை சிலந்திக்கு சச்சின் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது!
ஒருநாள் போட்டியில் "25 ஓவர்களில் 2 இன்னிங்ஸ்களில் மாற்றம் தேவை" - டெண்டுல்கர்
ஒருநாள் போட்டியில் "25 ஓவர்களில் 2 இன்னிங்ஸ்களில் மாற்றம் தேவை" - டெண்டுல்கர்
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்" - சவுரவ் கங்குலி!
"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!
"லாராவின் சாதனையை சச்சின் மிஞ்சிய தினம் இன்று" - வீடியோ பதிவிட்ட பிசிசிஐ!
Advertisement