சச்சின் பதிவிட்ட வினோதமான வீடியோ... நடுவர் தர்மசேனாவை கலாய்த்த நெட்டிசன்கள்!

Updated: 25 July 2019 13:20 IST

சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு கிரிக்கெட் போட்டியின் வீடியோ அதிக அளவில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பந்து ஸ்டெம்பில் பட்டு பெயில்ஸ் ஸ்டெம்பிலேயே நிற்கும்.

Sachin Tendulkar Shares Bizarre Video, Twitter Trolls Umpire Kumar Dharmasena
டெண்டுலகர் ''நீங்கள் அம்பயராக இருந்தால் என்ன முடிவை அறிவிப்பீர்கள்" என்று கேட்டிருந்தார். © Twitter

சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு கிரிக்கெட் போட்டியின் வீடியோ அதிக அளவில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பந்து ஸ்டெம்பில் பட்டு பெயில்ஸ் ஸ்டெம்பிலேயே நிற்கும். அதற்கு அம்பயர் அவுட் இல்லை என்ற அறிவிப்பையே தருவார். அதனை டெண்டுலகர் ''நீங்கள் அம்பயராக இருந்தால் என்ன முடிவை அறிவிப்பீர்கள்" என்று கேட்டிருந்தார்.

அந்தப் பந்துவீச்சாளருக்கு பரிதாப்பட்டு ரசிகர்கள் நகைச்சுவையான ட்விட்களுடன் இந்த வீடியோவை வைரலாக்கினார்கள்.

சிலர் "பேட்ஸ்மேன் கைது ஆனால் அவர் பெயிலில் வந்துள்ளார்" என்றும், இன்னும் சிலர் இலங்கை நடுவர் தர்மசேனாவை 2019 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இழைத்த தவறுடன் ஒப்பிட்டும் மீம்ஸ்களை பறக்கவிட்டனர்.

தர்மசேனாவுக்குதான் இந்த சூழலை சமாளிக்க தெரியும் என்றும், அவுட் தான் ஆனால் பந்துவீச்சாளருக்கு நான்கு ரன்கள் வழங்கப்படும் என்றும் கூறினர்.

மீடியா செய்திகளின்படி தர்மசேனா இறுதிப்போட்டியில் செய்த தவறால் நியூசிலாந்து வெல்ல முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

ஃபீல்டர் பந்தை எரியும் போது பேட்ஸ் மேன் க்ரீஸை அடையவில்லை என்றால் அந்த ரன் கணக்கில் எடுத்துக்கொள்ள்படக்கூடாது என்று கூறி இங்கிலாந்துக்கு அந்த பந்தில் 5 ரன்கள்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் ஆறு ரன்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்தது.

போட்டி டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் வழங்கப்பட்டு அதுவும் டை ஆனது.அதனால் அதிக பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

டிவி ரீப்ளேயை பார்த்ததும் தான் செய்தது தவறு என உணர்ந்ததாக தர்மசேனா கூறினார். தர்மசேனா மற்றொரு நடுவரிடம் கலந்தாலோசித்த பிறகே முடிவை அறிவித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சச்சின் பதிவிட்ட வினோதமான வீடியோ... நடுவர் தர்மசேனாவை கலாய்த்த நெட்டிசன்கள்!
சச்சின் பதிவிட்ட வினோதமான வீடியோ... நடுவர் தர்மசேனாவை கலாய்த்த நெட்டிசன்கள்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு... வருத்தத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்!
உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு... வருத்தத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்!
Advertisement