தோனி போல் ஆடிய ரஷித்கான் : பாராட்டிய சேவாக்

Updated: 30 November 2018 09:59 IST

மராத்தா அரபியன்ஸ் அணியுடன் ஆடிய பக்தோன்ஸ் அணி 126 ரன்களை 19.2 ஓவர்களில் கடந்து வெற்றி பெற்றது.

T10 League: Virender Sehwag Applauds Rashid Khan’s Helicopter Shot. Watch
பக்தோன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய ரஷித்கான் 7 பந்தில் 21 ரன்கள் குவித்தார்.(Representational Image) © BCCI

ஆப்கானிஸ்தானின் பிரபல வீரரான ரஷித்கான் ஷார்ஜாவில் டி10 போட்டிகளில் ஆடிவருகிறார்.  இந்த போட்டியில் மராத்தா அரபியன்ஸ் அணிக்காக ஆடிய ரஷித் கான், ஆட்டத்தின் 10வது ஓவரின் முதல் பந்தில் அபாரமான சிக்ஸர் ஒன்றை விளாசினார். அது இந்திய முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் ''ஹெலிகாப்டர் ஷாட்'' போல் அமைந்தது.

இதனை பெவிலியனில் இருந்தபடி பார்த்த இந்திய அணியின் அதிரடி வீரரும், மராத்தா அரேபியன்ஸின் கேப்டனுமான விரேந்தர் சேவாக் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினார். இர்ஃபான் பந்தை சிக்சர் அடித்த ரஷித்கானை மொத்த மைதானமும் ஆச்சர்யமாக பார்த்தது.

10 ஓவர்களில் 125 ரன்கள் குவித்தது. ரஷித்கான் 7 பந்தில் 21 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய பக்தோன்ஸ் அணி 126 ரன்களை 19.2 ஓவர்களில் கடந்து வெற்றி பெற்றது. ஆனாலும் ரஷித்தின் ஹெலிகாப்டர் ஷ்ஹாட் எல்லாராலும் பேசப்பட்டது.

இதற்கு முன்னர் ஆப்கான் வீரர் முகமது ஷெஷாத்தின் 16 பந்தில் 76 ரன்கள் பிரபலமாக பேசப்பட்டது. டி10 லீக்கில் ஆப்கான் வீரர்கள் சிறப்பாக ஆடி உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
ஆப்கன் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமனம்!!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
“ஆப்கானிஸ்தானுக்காக முதல் ‘சதம்’ அடித்த ரஷீத் கான்”- வைரல் மீம்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
உலகக் கோப்பையில் வைரலான ஷெஷாத், ரஷித் டான்ஸ்!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
வாட்சனை முறைத்த ரஷித்கானை கலாய்த்த நெட்டிசன்கள்!
Advertisement