டிவி ஷோ சர்ச்சை : ராகுல், பாண்ட்யா சஸ்பெண்ட் பிசிசிஐ அதிரடி முடிவு

Updated: 12 January 2019 17:12 IST

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கருத்துகளுக்காக இருவரிடமும் 24 மணி நேரத்துக்குள் விளக்கம் கேட்டு பிசிசிஐ எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியிருந்தது

Suspended Hardik Pandya, KL Rahul To Return From Australia Mid-Tour, BCCI Confirms

சிசிஐ வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ள தகவலில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் கிரிக்கெட் ஆடுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பாதி சுற்றுப்பயணத்தில் இருந்து நாடு திரும்ப சொல்லியுள்ளது பிசிசிஐ. ஒழுங்கு நடவடிக்கையின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தேர்வுக்குழு விரைவில் இவர்களுக்கான மாற்று வீரர்களை அறிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு மட்டுமின்றி நியூஸிலாந்து தொடருக்கும் இவர்களுக்கான மாற்று வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பிசிசிஐயின் நிர்வாக குழு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் இருவருக்கும் நோட்டிஸ் அனுப்பியிருந்தனர். டிவி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்த கருத்துக்களை முன் வைத்ததற்காக மன்னிப்பு கேட்க சொல்லி விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கருத்துகளுக்காக இருவரிடமும் 24 மணி நேரத்துக்குள் விளக்கம் கேட்டு பிசிசிஐ எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியிருந்தது.

அதற்கு பதிலளித்துள்ள ஹர்திக் பாண்ட்யா ''நான் அந்த நிகழ்ச்சியில் பேசியது தவறு தான். என்னை அறியாமல் அந்த கருத்துக்களை முன்வைத்தேன். அதற்கு வருத்தம் தெரிவிப்பதோடு மட்டுமின்றி மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் "இந்த விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை" என்று நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். இதனால் இரு வீரர்களுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆட தடை விதிக்க பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் எதுல்ஜியின் முடிவும் வந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பிசிசிஐ இருவரையும் நாடு திரும்ப சொல்லியுள்ளது. விசாரணை முடியும் வரை எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் ஆடக்கூடாது என்று கூறியுள்ளது.

பாண்ட்யா நான்காவது டெஸ்ட் போட்டியின் போதுதான் அணியில் இணைந்தார். ஒருநாள் தொடருக்கு முன்பாகவே நாடு திரும்பவுள்ளார். இதற்கிடையில் அவர் செய்த ஒரே விஷயம் அணியினரோடு செல்ஃபி எடுத்தது மட்டும் தான் என்று இனையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுடன் பயிற்சியை துவங்கிய ஹர்திக் பாண்ட்யா!
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டுடன் பயிற்சியை துவங்கிய ஹர்திக் பாண்ட்யா!
ராகுல், பாண்ட்யா விஷயத்தை ஓம்பட்ஸ்மன் விசாரிக்க நிர்வாகக்குழு கோரிக்கை!
ராகுல், பாண்ட்யா விஷயத்தை ஓம்பட்ஸ்மன் விசாரிக்க நிர்வாகக்குழு கோரிக்கை!
முதுகுவலி காரணமாக ஆஸி தொடரிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்!
முதுகுவலி காரணமாக ஆஸி தொடரிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்!
புல்வாமா தாக்குதல்: ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முகமது ஷமி நிதியுதவி!
புல்வாமா தாக்குதல்: ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முகமது ஷமி நிதியுதவி!
''பலியான 40 வீரர்களின் குழந்தைகளுடைய படிப்பு செலவை ஏற்கிறேன்'' - சேவாக் அறிவிப்பு
Advertisement