சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை!

Updated: 10 August 2019 11:19 IST

இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு காலில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 4 வாரம் முதல் 6 வாரம் வரை ஓய்வு தேவைப்படுகிறது.

Suresh Raina Undergoes Knee Surgery, Out Of Action For Four To Six Weeks
ரெய்னா இதுவரை 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 768 மற்றும் 5,615 ரன்கள் குவித்துள்ளார். © Twitter

இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு காலில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 4 வாரம் முதல் 6 வாரம் வரை ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் அவர் அடுத்து இந்தியா ஆடவிருக்கும் போட்டியில் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டது. 32 வயதான சுரேஷ் ரெய்னா, கடைசியாக 2018ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார். "கடந்த சில மாதங்களாக முழங்காலில் வலி இருந்ததால், சுரேஷ் ரெய்னாவுக்கு இப்போது ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவர் முழுமையாக குணமடைய 4-6 வாரங்கள் ஆகும். விரைவில் அவர் குணமடைய வாழ்த்துகிறோம்," என்று பதிவிட்டது.

ரெய்னா இதுவரை 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 768 மற்றும் 5,615 ரன்கள் குவித்துள்ளார். 78 டி20 போட்டிகளில் ஆடிய ரெய்னா 1605 ரன்கள் குவித்துள்ளார். 

ரெய்னா கடைசியாக, 2019 ஐபிஎல் போட்டிகளில் ஆடினார். அதில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய அவர் 17 போட்டிகளில் இடம்பெற்று 383 ரன்கள் குவித்தார். மேலும், ஐபிஎல் தொடரில் மூன்று அரைசதம் குவித்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
"உடல் சொல்வதை கேளுங்கள்" - ரெய்னாவுக்கு அறிவுரை சொன்ன ஜாண்டி ரோட்ஸ்!
"உடல் சொல்வதை கேளுங்கள்" - ரெய்னாவுக்கு அறிவுரை சொன்ன ஜாண்டி ரோட்ஸ்!
சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை!
சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை!
"மலையுடன் மோது தல தோனியுடன் மோதாதே"- பன்ட்டை எச்சரித்த நெட்டிசன்கள்!
"மலையுடன் மோது தல தோனியுடன் மோதாதே"- பன்ட்டை எச்சரித்த நெட்டிசன்கள்!
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை கடந்த முதல் இந்தியர் தோனி!
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை கடந்த முதல் இந்தியர் தோனி!
Advertisement