"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!

Updated: 27 September 2019 15:24 IST

தோனி ஏழாவது இடத்தில் வந்து 240 இலக்கைத் துரத்தினார், இதில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

MS Dhoni Should
சுரேஷ் ரெய்னா இதுவரை 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இடம்பெற்றுள்ளார். © AFP

உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோற்று வெளிய பிறகு தோனி பேட் செய்த இடம் குறித்து பேசப்பட்டது. தோனி ஏழாவது இடத்தில் வந்து 240 இலக்கைத் துரத்தினார், இதில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. மார்ட்டின் கப்டில் ஸ்டம்புகளைத் தாக்கியதால், தோனி 49வது ஓவரில் 50 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, தோனி முன்னதாக வந்திருந்தால், அவர் ரிஷாப் பந்தை வழிநடத்தி, போட்டியில் வெற்றிபெற இந்தியாவுக்கு உதவியிருப்பார் என்றார்.

"தோனி முன்னதாக வந்திருந்தால், அவர் பன்ட்டை வழிநடத்தியிருக்கலாம். அவருக்கு பிறகு, பாண்ட்யா மற்றும் ஜடேஜா இருந்தனர். அப்போதும் கூட அவர் இந்தியாவை கடைசி வரை போராட்டத்தில் வைத்திருந்தார். கப்தில் நேரடியாக பந்தை ஸ்டம்பிற்கு வீசாமல் இருந்திருந்தால், நாங்கள் வென்றிருப்போம்," என்றார் சுரேஷ் ரெய்னா.

ராணுவத்தில் பணியாற்ற தோனி, உலகக் கோப்பைக்கு பிறகு இரண்டு மாதங்கள் ஓய்வு பெற்றார்.அதன்பிறகு, தோனியின் ஓய்வு குறித்து யூகங்கள் தொடங்கின.

தோனியின் ஓய்வு முடிவை அவரிடமே கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

"எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று தோனியே முடிவு செய்வார்," என்றார் ரெய்னா.

இந்தியா நீண்ட காலமாக நிரந்தர 4ம் எண் வீரரை தேடுகிறது. ஆனால் அவர்களால் இன்னும் அந்த இடத்துக்கு சரியான பொருத்தத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 32 வயதான ரெய்னா, இந்தியாவின் நான்காவது இடத்துக்கு பொருத்தமாக இருக்க முடியும் என்று கூறினார். குறிப்பாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இரண்டு டி20 உலகக் கோப்பைகள் வரவிருக்கின்றன.

"இந்தியாவுக்காக நான் 4வது இடத்தில் ஆடுவேன். நான் இந்த இடத்தில் ஏற்கெனவே ஆடியுள்ளேன், சிறப்பாகவும் செயல்பட்டுள்ளேன். டி20 உலகக் கோப்பையில் என்னுடைய வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்."

சுரேஷ் ரெய்னா இதுவரை 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இடம்பெற்றுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
ராணுவ வீரர்கள் பற்றி டிவி தொடரை தயாரிக்கவுள்ளார் தோனி!
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
பழைய இந்தி பாடலைப் பாடிய எம்.எஸ்.தோனி! Viral Video
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"மறக்க முடியாத பயணம்" - சாக்‌ஷி தோனிக்கு நன்றி தெரிவித்த பாடகி ஜாஸ்ஸி கில்
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து தோனியிடம் கேளுங்கள்" - சவுரவ் கங்குலி
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
"ஜனவரி வரை என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம்" - எதிர்காலம் குறித்து தோனி!
Advertisement