டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்கள் குவித்த முதல் இந்தியர் சுரேஷ் ரெய்னா!

Updated: 26 February 2019 14:54 IST

ரெய்னாவுக்கு அடுத்த இடத்தில் கேப்டன் கோலி 7833 ரன்களுடனும், ரோஹித் ஷர்மா  7795 ரன்களுடனும் உள்ளனர்

Suresh Raina Becomes First Indian To Record 8000 T20 Runs
ரெய்னாவின் மோசமான ஃபார்ம் உத்திரபிரதேசத்தை பாதிக்கவில்லை. © AFP

உள்ளூர் அணிகளிலும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சரியாக ஆடாமல் இருந்து வருகிறார். உத்திர பிரதேச அணிக்காக ஆடிய கடைசி 9 ஆட்டங்களில் 3 அரைசதங்களை மட்டுமே அடித்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரெய்னா டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சையது முஷ்டாக் அலி கோப்பையில் புதுச்சேரியுடனான ஆட்டத்தில் 12 ரன்கள் குவித்தபோது இந்த சாதனையை படைத்தார். 300 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ரெய்னா 8001 ரன்களை குவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் ரெய்னாவின் அதிகபட்ச ரன் 126. சராசரி 33.47. இதுவரை அவர் 48 அரைசதங்கள் மற்றும் 4 சதங்களை குவித்துள்ளார்.

ரெய்னாவுக்கு அடுத்த இடத்தில் கேப்டன் கோலி 7833 ரன்களுடனும், ரோஹித் ஷர்மா  7795 ரன்களுடனும் உள்ளனர். 

சர்வதேச அளவில் கெயில் 12298 ரன்கள் எடுத்து முதலிடத்திலும், மெக்குலம், போலார்டு முறையே 9922, 8838 ரன்களை குவித்துள்ளனர். 

ரெய்னாவின் மோசமான ஃபார்ம் உத்திரபிரதேசத்தை பாதிக்கவில்லை. உபி 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த உத்திர பிரதேசம் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர், ஆடிய புதுச்சேரி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சரியாக ஆடாமல் இருந்து வருகிறார்
  • டி20 போட்டிகளில் அதிகபட்சமான 126 ரன்கள் எடுத்துள்ளார் ரெய்னா
  • சர்வதேச அளவில் கெயில் 12298 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா vs பங்களாதேஷ்: "சூப்பர் ஹீரோ"வாக மாறிய ரோஹித் ஷர்மா!
இந்தியா vs பங்களாதேஷ்: "சூப்பர் ஹீரோ"வாக மாறிய ரோஹித் ஷர்மா!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான T20 & ODI கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!!
India vs Bangladesh: இரண்டாவது டெஸ்ட் போட்டியை எங்கு, எப்போது காணலாம்?
India vs Bangladesh: இரண்டாவது டெஸ்ட் போட்டியை எங்கு, எப்போது காணலாம்?
India vs Bangladesh: பிங்க் பால் டெஸ்ட் மூலம் தொடரை கைப்பற்றுமா இந்தியா!
India vs Bangladesh: பிங்க் பால் டெஸ்ட் மூலம் தொடரை கைப்பற்றுமா இந்தியா!
இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் ஒரு "முக்கிய நிகழ்வு" - விராட் கோலி!
இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் ஒரு "முக்கிய நிகழ்வு" - விராட் கோலி!
Advertisement