''எல்லாத்தையும் நிறுத்துங்க கஷ்டமா இருக்கு'' ட்விட்டரில் மனம் வருந்திய சுரேஷ் ரெய்னா!

Updated: 12 February 2019 16:34 IST

போலி செய்திகளால் உருவான மனக்கசப்பை ட்விட்டரில் சற்று கோபமாக பகிர்ந்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

Suresh Raina explains he is absolutely fine and asks to stop spreading rumours about him

சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவுவது இயல்பான விஷயமாக மாறிவிட்ட நிலையில், அது இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை சற்று அதிகமாகவே பாதித்துள்ளது. போலி செய்திகளால் உருவான மனக்கசப்பை ட்விட்டரில் சற்று கோபமாக பகிர்ந்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

ரெய்னா, கார் விபத்தில் சிக்கியதாகவும், அவர் உயிருக்கு போராடி வருவதாகவும் செய்திகள் இணையத்தில் பரவத்துவங்கின. இந்த செய்திகளால் மிகுந்த மன வருத்தமடைந்ததாக ரெய்னா தனது பதிவில் கூறியுள்ளார். இதுதனது குடும்பத்தையும், நண்பர்களையும் மிகவும் வருத்தமடைய செய்துள்ளது என்றார்.

"கடவுளின் அருளால் நான் நன்றாக தான் இருக்கிறேன்". இந்த போலி செய்திகளை பரப்பிய யூ - ட்யூப் சேனல்கள் பற்றி புகார் அளித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இந்த செய்திகளை பரப்பிய யூ ட்யூப் சேனல்களை ரெய்னாவின் ரசிகர்கள் புகார் செய்தனர். இந்த விஷயத்தில் மனமுடைந்த ரெய்னா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சில காலங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் உள்ள ரெய்னா, உலகக் கோப்பைக்கு முன் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • சுரேஷ் ரெய்னாவுக்கு விபத்து ஏற்பட்டதாக வதந்திகள் பரவின
  • "போலி செய்திகளை பரப்பிய யூ-ட்யூப் சேனல்கள் பற்றி புகார் அளிகப்பட்டுள்ளது"
  • "தவறான செய்திகளை நிறுத்தி கொள்ளுங்கள்" - ட்விட்டரில் ரெய்னா
தொடர்புடைய கட்டுரைகள்
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
“இந்திய கேப்டன்களில் சிறந்தவர் தோனி” - சுரேஷ் ரெய்னா
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
"வாய்ப்பு கிடைத்தால் இந்திய அணியின் 4வது இடத்தில் நான் ஆடுவேன்" - சுரேஷ் ரெய்னா!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
"உடல் சொல்வதை கேளுங்கள்" - ரெய்னாவுக்கு அறிவுரை சொன்ன ஜாண்டி ரோட்ஸ்!
"உடல் சொல்வதை கேளுங்கள்" - ரெய்னாவுக்கு அறிவுரை சொன்ன ஜாண்டி ரோட்ஸ்!
சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை!
சுரேஷ் ரெய்னாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை!
Advertisement