பிசிசிஐ 'ஒரு மாநிலம் ஒரு வாக்கு' முறையில் மாற்றம்

Updated: 10 August 2018 00:40 IST

2015 ஆம் ஆண்டு லோதா கமிட்டி அமைக்கப்பட்டது. தற்போது அக்குழுவின் பரிந்துரைகள் பெரும்பான்மை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

Supreme Court Modifies
© PTI

ஒரு மாநிலம் ஒரு வாக்கு முறையில் சில மாறுதல்களைச் செய்து பிசிசிஐ-க்கான சட்டதிட்ட வரைவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மும்பை, சவுராஷ்டிரா, வதோதரா, விதர்பா ஆகிய கிரிக்கெட் சங்கங்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைத்துள்ளது. மேலும் சில மாறுதல்களுடன் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர், சந்திரசூத் ஆகியோர் அடங்கிய அமர்வு பிசிசிஐ-இன் சட்ட திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நான்கு வாரங்களுக்குள் இறுதி வடிவத்தை சமர்ப்பிக்குமாறும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவாளருக்கு கோர்ட் உத்தரவிட்டது. பிசிசிஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் படி பதிவுசெய்யப்பட்டுள்ள ஓர் அமைப்பே ஆகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேல் குறிப்பிட்ட சில மாற்றங்களின்படி, ரயில்வேஸ், சர்வீசஸ், பல்கலைக்கழகங்களின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தும் திருப்பியளிக்கப்பட்டது. மேலும் பிசிசிஐ-யின் புதிய சட்டதிட்டங்களை முப்பது நாட்களுக்குள் தழுவி மாநில கிரிக்கெட் சங்கங்கள் பின்பற்ற வேண்டும் என்றும்; இல்லையென்றால் முந்தைய உத்தரவின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிசிசிஐ-இடம் இருந்து நிதியினைப் பெற இயலாது என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஒரு பதவியை ஒருவர் தொடர்ந்து இருமுறை வகித்தால், பின்பு குறிப்பிட்ட காலத்துக்கு அப்பதவியை அவர் வகிக்க முடியாது என்ற சட்டத்தையும் நீதிமன்றம் பிசிசிஐ நிர்வாகிகளுக்குக் கொண்டுவந்துள்ளது. லோதா குழு பரிந்துரைத்த இவ்விதிக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அனுபவத்தின் தொடர்ச்சி இருக்கவேண்டும் என்று அவர் வாதிட்டார். பிசிசிஐ நிர்வாகிகளுக்கு 70 வயதுக்கு மேல் ஆகியிருக்கக் கூடாது என்ற வரம்புக்கும் ஆட்சேபித்தார். எனினும் அதனை ஏற்க மறுத்து, இந்த லோதா கமிட்டி பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

2013 ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சர்ச்சை எழுந்ததை அடுத்து அமைக்கப்பட்ட முத்கல் கமிட்டி BCCI இல் சீர்திருத்தங்கள் செய்யப் பரிந்துரைத்தது. இதையடுத்து  2015 ஆம் ஆண்டு லோதா கமிட்டி அமைக்கப்பட்டது. தற்போது அக்குழுவின் பரிந்துரைகள் பெரும்பான்மை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.  

முன்னதாக, பிசிசிஐ-இன் சட்ட திட்ட வரைவை இறுதி செய்யும் வரை, மாநில சங்கங்கள் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதை மேற்கொள்ளக்கூடாது என்று ஜூலை 5 அன்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.  

 

(With inputs from A. Vaidyanathan)
Comments
ஹைலைட்ஸ்
  • The bench comprised of justices A M Khanwilkar and D Y Chandrachud
  • The bench approved the draft constitution of cash-rich apex cricket body
  • They restored permanent membership to Railways, Services and Universities
தொடர்புடைய கட்டுரைகள்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
"சவுரவ் கங்குலி டெஸ்ட் கிரிக்கெட்டை இறக்க விட மாட்டார்" - சோயிப் அக்தர்
ஐபிஎல் திறப்பு விழாவை நடத்தப்போவதில்லை என பிசிசிஐ அறிவிப்பு: தகவல்
ஐபிஎல் திறப்பு விழாவை நடத்தப்போவதில்லை என பிசிசிஐ அறிவிப்பு: தகவல்
பெங்களூரு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துகொண்ட சவுரவ் கங்குலி!
பெங்களூரு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துகொண்ட சவுரவ் கங்குலி!
"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்
"கங்குலி பிசிசிஐ தலைவராவார் என்று எனக்கு முன்பே தெரியும்" - வீரேந்தர் சேவாக்
பிசிசிஐ தலைவராகும் போது கங்குலி அணிந்திருந்த பிளேஸரில் என்ன ஸ்பெஷல்?
பிசிசிஐ தலைவராகும் போது கங்குலி அணிந்திருந்த பிளேஸரில் என்ன ஸ்பெஷல்?
Advertisement