ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!

Updated: 15 March 2019 13:30 IST

2013 ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி பிசிசிஐ-யின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் ஆயுள் தடை விதிக்கப்பட்ட ஸ்ரீஷாந்தின் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.

Supreme Court Cancels Life Ban On S Sreesanth, Asks BCCI To Reconsider Punishment
ஸ்ரீஷாந்த் தரப்பில் கோரப்பட்ட மனுவின் கீழ் விசாரிக்கப்பட்டு தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. © PTI

2013 ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கி பிசிசிஐ-யின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் ஆயுள் தடை விதிக்கப்பட்ட ஸ்ரீஷாந்தின் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. நீதிபதிகள் அஷோக் பூஷன் மற்றும் கே.எம். ஜேசப் தலைமையிலான அமர்வு பிசிசிஐ-யின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டிக்கு 3 மாதத்துக்குள் ஸ்ரீஷாந்தை மறுபடியும் அணிக்கு பரிசீலிக்கலாம் என்று கூறியுள்ளது. 

உச்ச நீதிமன்ற அமர்வு தெளிவாக, "தடை நீக்கத்துக்கு பின் ஸ்ரீஷாந்துக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளது. 

இந்த வழக்கில் எந்தவித குற்ற‌ நடவடிக்கைகளும் இல்லை என்றும், ஐபிஎல் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட அனைவரும் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ ஸ்ரீஷாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்குமாறு அவர் தரப்பில் கோரப்பட்ட மனுவின் கீழ் விசாரிக்கப்பட்டு தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

"இது ஒரு மிகப்பெரிய போராட்டம், உச்சநீதிமன்றம் என் தடையை நீக்கியதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்'' என்று ஐபிஎல் மேட்ச் பிக்சிங் மீதான தடை நீங்கிய பின்பு ஸ்ரீஷாந்த் தெரிவித்துள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • "ஸ்ரீஷாந்துக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்"
  • 2013 ஐபிஎல் சூதாட்ட புகாரில் ஸ்ரீஷாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது
  • "3 மாதத்துக்குள் ஸ்ரீஷாந்தை மறுபடியும் அணிக்கு பரிசீலிக்கலாம்"
தொடர்புடைய கட்டுரைகள்
''பயஸ் ஆடும்போது என்னாலும் முடியும், அணிக்கு திரும்புவேன்'' ஸ்ரீஷாந்த் நம்பிக்கை
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
ஸ்ரீஷாந்த் மீதான ஆயுள் தடையை நீக்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்!
'அவர் குற்றம் செய்யவில்லை'' ஸ்ரீஷாந்தின் மனைவி பிசிசிஐக்கு உருக்கமான கடிதம்!
‘சச்சின் எனக்காக செய்த அந்த செயல்..!’- ஸ்ரீசாந்த் உருக்கம்
‘சச்சின் எனக்காக செய்த அந்த செயல்..!’- ஸ்ரீசாந்த் உருக்கம்
Advertisement