பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!

Updated: 18 September 2019 13:28 IST

ஸ்டோக்ஸ் "பத்திரிகையின் மிகக் கீழ்த்தரமான வடிவம்" என்று குறிப்பிட்டார். இந்தப் பதிவு வெளியான சில மனி நேரத்திலேயே அவர் இந்திய ட்ரெண்டாக மாறினார்.

Ben Stokes Receives Support From Joe Root, Michael Vaughan After Slamming Newspaper
இங்கிலாந்து மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு ஆகியோரின் ஆதரவையும் ஸ்டோக்ஸ் பெற்றார். © AFP

பென் ஸ்டோக்ஸ் செவ்வாய்க்கிழமையன்று ஒரு ஆங்கில செய்தித்தாளை கடுமையாக சாடி பதிவிட்டிருந்தார். அந்த செய்தித்தாள், அவருக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் குறித்து வெளியிட்டதே இதற்கு காரணம். அந்தச் செய்தித்தாளை ஸ்டோக்ஸ் "பத்திரிகையின் மிகக் கீழ்த்தரமான வடிவம்" என்று குறிப்பிட்டார். இந்தப் பதிவு வெளியான சில மனி நேரத்திலேயே அவர் இந்திய ட்ரெண்டாக மாறினார். அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தனர். இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தயவுசெய்து இதைப் படித்து அதை மதிக்க நேரம் ஒதுக்குங்கள்," என்று பதிவிட்டார்.

தனது சமூக ஊடக கணக்கில் ஸ்டோக்ஸின் அறிக்கையை ட்விட் செய்து, அதைப் படிக்கும்படி மக்களை வலியுறுத்திய முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, இங்கிலாந்து மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு ஆகியோரின் ஆதரவையும் ஸ்டோக்ஸ் பெற்றார். "இதைப் பார்க்க ஏமாற்றமாக உள்ளது. @benstokes38 இந்த கோடை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். அவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் சிறப்பாக விஷயங்களுக்கு தகுதியானவர்கள்," என்று ராஷ்போர்டு குறிப்பிட்டார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) தலைமை நிர்வாக அதிகாரி டாம் ஹாரிசனும் இந்த விவகாரம் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

"செய்தித்தாள்களை விற்க இந்த அளவின் ஊடுருவல் அவசியமா என்று நாங்கள் வருத்தப்படுகிறோம்"

"இந்தக் கோடையில் பென் கிரிக்கெட் வரலாற்றில் அவரது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். முழு விளையாட்டும், நாடும் அவருக்கு ஆதரவாக நிற்கின்றன என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று ஈசிபி தலைவர்  கூறினார்.

சமீபத்தில் முடிவடைந்த ஆஷஸ் 2019ல் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடியதுடன், போட்டியைத் தக்கவைக்க உதவினார். தொடரை உயிர்ப்புடன் வைக்க பெரிதும் உதவினார்.

இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியை வென்றது. எனவே தொடர் 2-2 என்ற கணக்கில் ட்ராவானது.

ஆஷஸ் தொடருக்கு முன்பு, ஸ்டோக்ஸ் 2019 உலகக் கோப்பையின் போது இங்கிலாந்தின் நட்சத்திர வீரராக இருந்தார். ஏனெனில் அவரது ஆட்டம், முதல்முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ரசிகரை தகாத வார்த்தை பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்!
ரசிகரை தகாத வார்த்தை பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: களத்தில் கோலியாக மாறிய ரோஹித் ஷர்மா!
பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!
பென் ஸ்டோக்ஸுக்கு ஆதரவு தெரிவித்த ஜோ ரூட் மற்றும் மைக்கெல் வாகன்!
வலிமிகுந்த சம்பவம் குறித்து வெளியிட்ட செய்தித்தாள் - கடுமையாக சாடிய ஸ்டோக்ஸ்!
வலிமிகுந்த சம்பவம் குறித்து வெளியிட்ட செய்தித்தாள் - கடுமையாக சாடிய ஸ்டோக்ஸ்!
"இப்போதிலிருந்து நான்
"இப்போதிலிருந்து நான் 'ஸ்பர்ஸ் அணி' ரசிகர்" - பென் ஸ்டோக்ஸ்!
Advertisement