முதலாம் ஆண்டு திருமண நாளில் மனைவிக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன ஸ்மித்!

Updated: 16 September 2019 16:43 IST

நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸை ஸ்மித் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

Steve Smith Thanks Wife Dani Willis For "Support, Guidance And Love" On 1st Wedding Anniversary
பிக் பாஷ் லீக்கின் (பிபிஎல்) தொடக்க விழாவில் ஸ்மித் வில்லிஸை சிட்னி பாரில் சந்தித்தார். © Instagram

தென்னாப்பிரிக்காவில் பந்து சேத முறைகேட்டைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆண்டில் சில கடினமான காலங்களை கடந்து வந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான வருகையை ஏற்படுத்திய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன், தனது முதல் திருமண ஆண்டு விழாவில் தனது மனைவி டேனி வில்லிஸுக்கு "ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் அன்பு" வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். அவரின் நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸை ஸ்மித் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் தற்போது ஆஷஸ் 2019 க்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர், இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை வெளியிட்டார். "1வது திருமண ஆண்டுவிழா வாழ்த்துக்கள் @dani_willis உன்னுடைய ஆதரவு, வழிகாட்டுதல் மற்றும் அன்பு அனைத்திற்கும் நன்றி. ஐ லவ் யூ!" என்று ஸ்மித் தனது படத்தை மனைவி டானி வில்லிஸுடன் பதிவிட்டார்.

பிக் பாஷ் லீக்கின் (பிபிஎல்) தொடக்க விழாவில் ஸ்மித் வில்லிஸை சிட்னி பாரில் சந்தித்தார்.

29 வயதான ஸ்மித் அப்போது வில்லிஸுக்கு ப்ரப்போஸ் செய்தார். வில்லிஸ், 2017ம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள ராக்ஃபெல்லர் மையத்தில் மேக்வாரி பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் வணிகத்தைப் படித்தவர். இப்போது அவர் வழக்கறிஞராக உள்ளார்.

நடந்து வரும் ஆஷஸ் தொடரில் ஸ்மித், இரட்டை சதமடித்தார். பந்து சேதப்படுத்திய தடைக்கு பின்பு, ஸ்மித் இந்தப் தொடரில் 751 ரன்கள் குவித்துள்ளார்.

பேட்டிங் மட்டுமல்ல ஃபீல்டிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். இறுதி ஆஷஸ் டெஸ்டின் மூன்றாவது நாளில், ஸ்மித் கிறிஸ் வோக்ஸை அவுட் செய்ய அவரின் வலது பக்கம் தாவி குதித்தார்.

ஆஷஸ் தொடருக்கு பின், ஆஸ்திரேலியா இலங்கை அணியுடனான மூன்றுபோட்டிகள் கொண்ட டி20  தொடரில் சந்திக்கவுள்ளது. இது அக்டோபர் மாதம் 27ம் தேதி தொடங்குகிறது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
"ஸ்மித் மிக மோசமாக சதமடிக்கக் கூடியவர்" - கோலியுடன் ஒப்பிட்ட ஜாண்டி ரோட்ஸ்
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Ashes 2019: கண்ணாடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்மித் மற்றும் லீச்!
Advertisement