உலகின் சிறந்த வீரருடன் ஸ்மித்... ஆஸி. வீரர்களை கலாய்த்த சோமர்செட் கிரிக்கெட்!

Updated: 13 September 2019 18:47 IST

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை ஐந்து இன்னிங்ஸ்களில் 671 ரன்கள் எடுத்த ஸ்மித், ஆஷஸை 18 ஆண்டுகளில் முதல் முறையாக தக்க வைத்துக் கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு உதவி வருகிறார்.

Steve Smith With Greatest Batsman Of This Generation: Somerset Cricket Trolls Australian
ஸ்மித் பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். © AFP

நடந்துகொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பியதிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் விதிவிலக்காகியுள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை ஐந்து இன்னிங்ஸ்களில் 671 ரன்கள் எடுத்த ஸ்மித், ஆஷஸை 18 ஆண்டுகளில் முதல் முறையாக தக்க வைத்துக் கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு உதவி வருகிறார். 30 வயதான ஸ்மித், பந்தை சேதப்படுத்திய காரணத்துக்காக 12 மாதம் தடை விதிக்கப்பட்டார். இவருடன் டேவிட் வார்னருக்கும் தடை விதிக்கப்பட்டது. 12 மாதம் தடை முடிந்து ஸ்மித் ஆஷஸ் போட்டியில் ஆட வந்தார். 2019 ஆஷஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஸ்மித்தை, ஆங்கில கவுண்டி கிளப், ட்விட்டரில் வம்பிழுத்துள்ளது. சோமர்செட், ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜாக் லீச் இருக்கும் ஒரு படத்தை பகிர்ந்து, "இந்த தலைமுறையின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர், ஸ்டீவ் ஸ்மித்துடன் இன்று மாலை ஓவலில் நேரம் செலவழிக்கிறார்."

முன்னதாக, ஜாக் லீச்சைப் பிரதிபலிக்கும் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து ஸ்மித் இங்கிலாந்து ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். ஆங்கில ஊடகங்களில் பல்வேறு தகவல்களின்படி, மான்செஸ்டரில் வெற்றி பெற்ற பிறகு, ஸ்மித் கண்ணாடி அணிந்தபோது இடது கை பேட்டிங் செய்யும் வீரரை போல் காணப்பட்டார்.

அவர் அணிக்கு திரும்பிய பிறகு, ஸ்மித் பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஷஸில் ஸ்மித் சராசரியாக 134.20 ஆக உள்ளார், மேலும் தொடரின் இரண்டாவது சிறந்த பேட்ஸ்மேனை விட 297 ரன்கள் முன்னிலையில் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் ஒன்பது இன்னிங்ஸ்களில் 374 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தத் தொடரில், ஆஸ்திரேலியா நான்கில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்றது. இங்கிலாந்து ஹெடிங்லேயில் வெற்றியைப் பதிவுசெய்ய முடிந்தது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
"அவரை தாக்கியிருப்பேன்" - ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை விமர்சித்த சோயிப் அக்தர்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
Australia vs Sri Lanka: ஸ்டம்ப்பிங் செய்தும் அவுட் ஆகாத ஸ்டீவ் ஸ்மித்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Sheffield Shield: "அவரும் மனிதர் தான்"... டக் அவுட்டான ஸ்வீவ் ஸ்மித்!
Advertisement